Nov
03
    
ஸ்ரீ - Category Uncategorized in 2008

பிலிமு காட்ட கூப்டது நம்ம “பின்புலி” ஜி.

முன் குறிப்பு: இந்த வாரம் புதன் கிழமை கவிதை உண்டு. உசாரய்யா உசாரே….. :)

படங்கள் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் அதனுள் நம்மை ஒட்ட வைக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து ஆரம்பம் தொட்டே. அதனால் தான் திரையை பார்த்து வணக்கம் சொல்வது, கார் கதவு தானாகவே திறப்பது போன்ற காட்சிகள் சின்ன வயது முதலே பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. குணா பார்த்து கொண்டே அம்மாவிடம் “கமல் செத்துட்டானே இனிமே கமல் படம் வராதா?” என்றவ‌னுக்கு படம் வெறும் நிழல் என அப்போதே புரிய வைத்ததால், அந்த நிழலில் எது உண்மையாக தெரிகின்றது என்று ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தேன். என்னுடைய திரை சார்ந்த பார்வை நிச்சயம் பலருக்கு சுவாரசியமாக இருக்காது என்பது என் கருத்து. மீதமுள்ளவை கீழே:

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Oct
22
    
ஸ்ரீ - Category Uncategorized in 2008

அடுத்து ஒரு தொடர் வெளாட்டுங்க. வெளாடுறதே இந்த பசங்களுக்கு வேலையாப் போச்சு. இந்த முறை கூப்டுகீறது ஸ்ரீமதி. சப்ப ஆட்டம் தான். கம்பூட்டர் மூஞ்சில யாரு? யப்பா இப்போ ஆரம்பிச்சிருக்கீங்களே தொடர் விளையாட்டு எதிர்த்து ஒரு ஆட்டம் அதுல என்னையும் சேத்துக்கோங்கப்பு. கொஞ்ச நாளா சரியான கரு கிடைக்காத்தால் லீவு விட்டுட்டேன். அல்லாரும் சந்தோசமா இருப்பீங்க. ரொம்ப குசி ஆயிடாதீங்கப்பு நான் அப்பீட்டாகலை, கொஞ்ச நாள்ள ரிப்பீட்டாயிடுவேன். சரி இப்போ கதைக்கு வருவோம்.

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Aug
01
    
ஸ்ரீ - Category Uncategorized in 2008

மறுபடியும் தொடர் பதிவு போட கூப்பிட்டாச்சு. கொசுவத்தின்னா சுலபமா சுத்திடலாம். இது ஏ,பி,சி,டியாம். அதை மறக்கற நேரத்துல இப்படி ஒரு பதிவு போட சொல்லிட்டாங்க Sri. போட்டுடலாம்ன்னு தொலைபேசியில சொல்லிட்டு வெச்சிட்டேன். எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை தான்.

கீ போடுல இதையாவது சரியான வரிசையில வெச்சா என்னவாம்? இப்படி கலைச்சி கலைச்சி போட்டா எப்படி தான் ஒரு சின்ன புள்ள சரியான வரிசையை கண்டு பிடிப்பேன்? லோகத்துல யாருக்கும் பொறுப்பில்லை யாருக்கும் அக்கரை இல்லை. எதையும் ஒழுங்கா ஆடர்லையே வைக்க மாட்டேங்குறா. என்னமோ போங்க. என்ன கூப்பிட்டதுக்கு ஒரு பதிவு போட்டு ஓடி போயிடுறேன்.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
04
    
ஸ்ரீ - Category அசைபோடுகிறேன் in 2008


நாடோடி இலக்கியன் “திண்ணை” என்கிற தலைப்பில் பதிவு போட்டு கொசுவத்தி சுத்த கூப்பிட்டு இருக்கார். திண்ணைக்கும் எனக்குமான உறவு அந்த வயதில் எனக்குப் புரியாமல் தான் இருந்திருக்கிறது. “திண்ணைக்கும் எனக்குமான உறவு சொல்லிக்கொள்ளும் படி இல்லை” என்று தான் முதலில் இந்தப் பதிவை ஆரம்பித்தேன். ஒரு முறை எழுதிய பிறகு என் பதிவுகளை மாற்றும் பழக்கமில்லை எனக்கு. முதல் முறை மீண்டும் இந்தப் பத்திக்கு வந்து என் கருத்தை மாற்றி எழுதுகிறேன்.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
25
    
ஸ்ரீ - Category காதல் in 2008

நண்பர்களே!

இன்றோடு ஒரு வருடம் முடிகின்றது அன்றில் பிறந்து. வலைப்பூக்கள் என்னவென்றே தெரியாமல் நுழைந்தவன் தான் நான். ‘ஒரு வருடம் பெரிய விசயமா என்ன?’ என்ற கேள்வியும் எழலாம். நிச்சயம் இல்லை. காளானாக முளைத்த எனக்கு நீரூற்றியவருக்கு நன்றி சொன்னால் அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். முட்டை உடைத்து, தட்டுத்தடுமாறி பறக்கக் கற்றுக்கொண்ட இந்த அன்றிலுக்கு இளைப்பாற கிளைகள் கொடுத்த அனைத்து நெஞ்சங்களுக்கு என் நன்றி. சரிவர பறக்கவில்லையானால் கல்லெறியலாம் தயக்கம் வேண்டாம்.

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Apr
09
    
ஸ்ரீ - Category ஜஸ்ட் மொக்கைஸ் in 2008

இத்தனை நாளா கவுஜைன்னு பேருல போட்ட மொக்கை போதாதுன்னு கொஞ்சம் அசைபோடலாமேன்னு வந்திருக்கேன். பள்ளி படிக்கும் போது நாம் பாடின பாட்டு போட சொல்லி அழைத்திருக்கார் ‘காதல் முரசு’. பள்ளி வயதில் எனக்கு ஒரே ஒரு நண்பன் தான். அவனோடு தான் அதிகம் பொழுதை கழிப்பேன். எப்போதும் ஒன்றாய் தோள் மீதி கை போட்டு சுற்றி இருக்கிறேன். அவன் பெயர் ‘தனிமை’. கொஞ்சம் பெரியவன் ஆன பின்னர் வழக்கம் போல ஒரு மட்டையை பிடித்து கிரிக்கட் விளையாடிய ஒரு சராசரி சிறுவன் தான் நான். அதனால் அந்த ஒரு அழகான காலம் என் வாழ்க்கையில் கொஞ்சம் குறைவு (ஒரு வேளை மறந்து போச்சான்னு கூட தெரியலை. இந்த மாதிரி எதுவும் பண்ணாதது நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன்). அதனால் நண்பர்களோடு கூட பேசி சில பாட்டு பிடிக்கலாம் என்ற முயற்சியில் இறங்கினேன். அந்த உரையாடலில் கிடைத்த சில பாடல்கள் கீழே.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jan
22
    
ஸ்ரீ - Category ஜஸ்ட் மொக்கைஸ் in 2008

இந்த வார நட்சத்திர பதிவர் மாப்பி அருட்பெருங்கோ மொக்கை போட கூப்பிட்டு இருக்கார். கூப்பிட்டதுக்கு நன்றி மக்கா. எவ்ளோவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா? அப்டினு நெனச்சு தான் எழுத வந்தேன் ஆனா எழுத தலைப்பு கிட‌க்கலை. மூளைய சொறிஞ்சதுக்கு அப்புறம், நம்ம ரேஞ்சுக்கு ஒரு லேஞ்சுவேச்சுல மொக்கை போட்டா பத்தாது பல பாஷைல மொக்கையை போட்டு விரிவு படுத்துடா அப்டினு வழக்கம் போல நம்ம அயின்ஸ்டீன் ஐடியா குடுத்தார். சரி நமக்கு தான் ஜெர்மன், பிரென்சு, இத்தாலியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஸ், ஜாப்ப‌னீஸ், ம‌லாய், சிங்க‌ள‌ம், ர‌ஷிய‌ன், கொரிய‌ன், விய‌ட்நாமீஸ், போலீஸ்(Polish), இஜிப்டியன் இப்டி தெரிஞ்ச பல பாஷைல ஏதாவது ஒன்னுல எழுதலாம்னு தான் இருந்தேன்
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!