Sep
05
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

நண்பர்களே! புதிய இணையதளம் ஒன்று துவங்க உள்ளதால் இந்த வலைப்பூவில் ஆரம்பித்த இந்த தொடர்கதையை இதிலேயே முடிக்கும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. கதையில் மாற்றம் இல்லை இது தான் முடிவு.

காதல் காலம் -1

தேவதை வாக்கு பலிக்குமா? நீ சொன்னது போலே இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்தோம். அப்படி சொல்வதை விட நான் சேர்ந்த கல்லூரியில் நீயும் அதிக மதிப்பெண் எடுத்தாலும் வந்து சேர்ந்தாய். நம் ஊருக்கு அருகிருப்பதால் உன் அப்பா சம்மதிக்க. நம் காதலை கல்லூரிக்கு பத்திரமாக கொண்டு சென்றோம் இருவரும். கல்லூரிக்கு ரயில் பயணம். அவசரத்தில் ஓடி வரும் உனக்காக நான் காத்திருந்தாலும் ரயில் காத்திருக்காத அந்நாட்களில் பேருந்தில் சேர்ந்து பயணித்தோம். பயணத்தில் பின்நோக்கி ஓடும் மரங்கள், உன்னை நோக்கி ஓடும் மனம். தினம் சன்னலோர இருக்கைக்காக சண்டை போடுவாய். ஊடலில்லாமல் காதலா? உன்னோடு சண்டையிட்டு வேண்டுமென்றே தோற்று உன் அருகில் அமர்வேன். வென்ற பரவசத்தில் உன் கண்களில் சின்ன மின்னல்கள் மின்னி மறையும். எனக்கு ரயிலோடு பயணங்கள் இல்லை அந்த நாட்கள், ஒரு மயிலோடு பயணம்.

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Aug
07
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே….

இது பாகம் 10 முதல் பாகம் இதோ இங்கே.நேரமில்லாதவர்கள் இதை மட்டும் கூட தனியாகப் படிக்கலாம்.

நிறைமாத கர்பிணியாய் மேகக்கூட்டம். உன்னைக் காண வெளியே கால் எடுத்து வைப்பதற்குள் பிரசவித்து விட்டது. சக்கரைவாகப் பறவையைத் தவிர மற்றவை எல்லாம் மனமுடைந்து கிளைகளில். சக்கரைவாகமாகவே பிறந்திருக்கலாம் மழைக்காலத்திலும் கூட காதலித்திருக்கலாமே என எண்ணத்தில் ஜன்னலோரம் மழையை ரசிக்கிறேன். மழையில் ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தது காற்று. என்னை வந்து சேரும் முன் உன்னைத் தொட்டு விட்டதா அது? இவ்வளவு குளிர்கின்றதே இன்று. அருகில் நீயில்லாமல் சாரல்கள் கூட ஊசியாய் என்னைக் குத்தின. மின்சாரக்கம்பிகளில் சிட்டுக்குருவிகளுக்கு பதிலாக மழைத்துளிகள் தொங்கிக் கொண்டிருந்தன ஆனால் அடுத்து வந்த துளி முன்னால் இருந்ததை தள்ளி விட்டு இடம் பிடித்துக் கொண்டது. ம்… இந்த இயற்கையும் கூட மனிதர்களைப் பார்த்து மாறி விட்டதோ?


Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Aug
03
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே….

இது பாகம் 9 முதல் பாகம் இதோ இங்கே.

மாலைப்பொழுது. தன் பணி முடிந்தும் உறங்கச் செல்லாமல் வானத்தின் விளிம்பில் சூரியன். அழகான செவ்வானம். வீடு திரும்பும் சூரியன் முதுகில் சிவப்புமை அடித்து முட்டாள் தினம் கொண்டடுகிறதா நிலா? இல்லை இரவு - சூரியனை கொலை செய்ய அதன் உதிரமா வானம் முழுக்க?

முதன்முதலாக உன்னை நினைக்காமல் வானத்து விளையாட்டைப் பார்த்தபடி அந்த சூரியகாந்தி தோட்டத்தில் காத்திருக்கிறேன். அனிச்சையாய் நீ வருவதை உணர்ந்தேன் ஆனால் பொய்யாய் தெரியாதது போல நடித்து வானம் பார்க்கிறேன். பின்னிருந்து என் கண்களை கைகளால் கைது செய்தாய்.


Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
20
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

இது பாகம் 8 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.

எப்போதுமே உன்னோடு நான் இருந்து விடுவேன் என்று நினைத்து தானோ அந்த பொறாமைக்கார கடவுள் படைத்தான் இரவை. தனிமையைக் கூட சமாளித்து விடுவேன் ஆனால் உன் நினைவுகளை என்ன செய்ய? இரவோடு சேர்ந்து அவையும் இம்சை செய்தன. கனவோடு கண்ணாமூச்சி, தலையணைக்கு உயிர் தந்து அதோடு செல்ல பேச்சு, இப்படியே இரவைக் கொன்று முடித்தேன். தலையில் தீ வைத்து விட்டார்களோ? தன் கொண்டையைப் பார்த்து சந்தேகத்தில் கூவும் சேவல், மெதுவாக வெளியே வந்து சோம்பல் முறிக்கும் சூரியன், என்னைப் போலவே இரவை வெறுத்திருந்து கூட்டை விட்டு பறக்கும் புறாக்கள் அனைத்தும் அழகாகத் தெரிந்தாலும் மனம் உன்னைத்தேடியே அலைபாய்ந்தது. பால் வாங்கும் காரணம் சொல்லி கால்கள் உன் வீடு தேடி நடந்தன.


Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
09
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே….

இது பாகம் 7 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.

பிள்ளையார் முன் கண்கள் மூடி நீ. உன்னைப் பார்த்தபடி நான். தற்செயலாக இதை கவனித்தாய்.

“ஏய் ஒழுங்கா அங்க பாத்து சாமி கும்பிடு.”

“ரெண்டு சிலை இங்கே இருக்கு, அதில் அழகான சிலையை பாத்துகிட்டு நிக்கிறேன். உன்னை பாத்து கோபுரத்து சிற்பங்களுக்கே பொறாமை வேணும்னா நீயே பாறேன் எல்லாம் முகம் சுலிச்சிகிட்டு தான் இருக்கு.”
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
09
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே….

இது பாகம் 6 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.

இன்று வெகு நேரம் ஆகியும் விடியாதது போலவே தோன்றியது. யோசித்துப் பார்க்கையில் ஞாயிற்றுக்கிழமை என்று சிற்றறிவுக்கு எட்டியது. பிரதி ஞாயிறு விடுமுறை விட்ட வெள்ளையனை திட்டலானேன். சுவாசிக்காமல் இருக்க முடியுமா? கழற்றி விட்ட கன்றுக்குட்டியாய் உன்னைத்தேடி உச்சிப்பிள்ளையார் கோயில் அடிவாரத்தில் காத்திருந்தேன். உழைத்த 100 ரூபாய் நோட்டை நொடிக்கு நூறு முறை எடுத்து பெருமை பட்டுக்கொள்ளும் கூலிக்காரனைப் போல, உன் காதல் ஒன்று மட்டுமே உடன் இருக்க உலகத்தை வென்ற பெருமிதத்தில் நான். வழக்கம் போல் காலத்தை முந்திக்கொண்டு முன்னமே வந்து சேர்ந்தேன். என் தனிமையோடு பேசிக்கொண்டிருந்தேன்.

“லூசு வெயில்ல நின்னு என்ன பண்ற?”

“நட்சத்திரம் எண்ணிக்கிட்டு இருந்தேன்.”
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
29
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

ந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே….

இது பாகம் 4 முதல் பாகம் இதோ இங்கே.

மறுநாள் வந்த உன்னிடம் புதிதாய் வெட்கம் ஒட்டிக் கொண்டிருந்தது. ரோஜாவே அழகு ரோஜா மேல் பன்னீர்த்துளி பேரழகு. ரோஜாவா நீ? குறிஞ்சி! ரோஜா அன்றாடம் பார்க்கலாம் ஆனால் உன்னைப் பார்க்க 12 வருடம் காத்திருந்தேனே குறிஞ்சி தானடி நீ. உன் வெட்கம் தோய்ந்த சிரிப்பு என் காதலை, இப்போது நம் காதலை உறுதிப்படுத்தியது. மாலையில் பள்ளி முடிந்து நாம் இருவரும் மாந்தோப்பில்.

“எனக்கும் உன்னை பிடிக்கும்டா ஆனா நேத்திக்கு முறைச்சிட்டு போயிட்டேன்.” என்றாய் அசடு வழிய. குழம்பிப்போன ஒரு வண்டு உன் தலையை வட்டமிட்டபடி துரத்தியது.

“அத அடிக்காதமா அது என்ன செய்யும் பாவம் இவ்ளோ பெரிய பூவப்பாத்திருக்காது இதுக்கு முன்னாடி.”

“கடிக்க வந்தா சும்மாவா விடுறது?”

“சரி அப்போ அதுக்கு கொடுமையா ஒரு தண்டனை குடுப்போம்.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
28
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே….

இது பாகம் 3 முதல் பாகம் இதோ இங்கே.

அந்த ஷனத்தில் இருந்து தினமும் உன் புன்னகையைச் சேர்க்கும் தேனீ ஆனேன். ஆம் உன் சிரிப்பும் கூடத் தேன் தான் எங்கிருந்து சுரக்கிறதோ தெரியாது. விளக்கிருக்கும் இடத்துக்கு தன் இற‌க்கையைக் காணிக்கையாக்கப் புறப்படும் ஈசல் போல உனக்குப் பின்னால் எப்பவுமே நான். ஆனால் கொடுக்க ஒன்றும் இல்லை என் காதலைத் தவிர, இழக்க ஒன்றும் இல்லை இந்த உயிரைத் தவிர. இரவு முழுவதும் ஒத்திகைப் பார்த்தும் உளறுவதே வழக்கமாகக் கொண்டிருந்தேன். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் முதன்முதலாக பிரம்மாவைத் திரும்பிப்பார்த்தேன். ஏதோ ஒரு புத்தகத்தில் நான் ரசித்த பிக்காசோவின் ஓவியத்திற்கு உயிரூட்டி அனுப்பி வைத்ததற்காக நன்றி சொன்னேன்.

நீ சுவாசித்த காற்றைத் தேடித் தேடி சுவாசித்தேன். அது நுரையீரலுக்குப் போகாமல் நேரே இதயத்துக்கு படை எடுத்தது உன்னைத்தேடி.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
27
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே….

இது பாகம் 2 முதல் பாகம் இதோ இங்கே.

கண்கள் மூடியும் உன் முகமே. காதல் பழக்கமில்லாத எனக்கு இப்போது நடப்பவை எல்லாம் புதிதாய், அழகாய்.
“தேவதையைப் பார்த்தாயே கனவு காணாவிட்டால் எப்படி?” என்றவாறே கனவு தேவன் என்னை இழுத்துச் சென்றான். கருப்பு வெள்ளை கனவுகளில் இன்று ஏனோ வண்ணங்கள்.
“ஏன் இந்த வண்ணம்?” கேட்டேன் அவனிடம்.
“குழந்தாய், உனக்கு எல்லாம் விநோதமாக தெரிகிறதா? நீ பசலை நோயில் சிக்கிக்கொண்டாய்!” என்றான் அவனுக்கே உரிய தோரணையில்.
கடவுள் சொல்வதை நம்பாமலா இருக்க முடியும்?. மிதந்து வந்தாய் நீ உன் நிழலில் கூட வண்ணங்கள் வழிந்தன. “இது கலையாமலே இருக்கக் கூடாதா?” ஏங்கியது மனது. ஆனால் புத்தி, “பைத்தியக்காரா, நிழலுக்கு ஆசைப்படுகிறாயே!
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
26
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே..

அழகான சுப்ரபாதம் கேட்க கையில் காபியோடு அம்மா. “டேய் சிவா! எழுந்திடு டா ஆபீஸுக்கு நேரம் ஆச்சு”. இரவெல்லாம் விழித்திருந்த கண்கள் என்னை தூங்க சொல்லி கெஞ்சியும் விழித்தேன். என் மற்றொரு யுகத்தை தொடங்க. அவள் இல்லாமல் நாட்கள் எல்லாம் யுகங்கள் ஆனது. அவசரமக கிளம்பியவனிடம் “அப்படியே பேங்குக்கு போயிட்டு வாப்பா” அம்மா சொன்னதும் “ம்” என்று பதில் அளித்து விட்டு புறப்பட்டேன்.

வழக்கம் போல் டீம் லீடிடம் பொய் சொல்லிவிட்டு கிளம்பினேன் பேங்குக்கு, அடுத்த மணி நேரம் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி தெரியாமல். அன்று ஒரு நாள் நான் சபித்த காதல் தேவதை பழி தீர்க்க வந்திருந்தாள். நீண்ட வரிசையில் நின்றிருந்தவன், “எக்ஸ்யூஸ்மி, கேன் ஐ ஹேவ் யுவர் பென்?” என்றதை கேட்டு திரும்பினேன். திரும்பியவனுக்கு மனதில் இடி.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!