Jul
04
    
ஸ்ரீ - Category அசைபோடுகிறேன் in 2008


நாடோடி இலக்கியன் “திண்ணை” என்கிற தலைப்பில் பதிவு போட்டு கொசுவத்தி சுத்த கூப்பிட்டு இருக்கார். திண்ணைக்கும் எனக்குமான உறவு அந்த வயதில் எனக்குப் புரியாமல் தான் இருந்திருக்கிறது. “திண்ணைக்கும் எனக்குமான உறவு சொல்லிக்கொள்ளும் படி இல்லை” என்று தான் முதலில் இந்தப் பதிவை ஆரம்பித்தேன். ஒரு முறை எழுதிய பிறகு என் பதிவுகளை மாற்றும் பழக்கமில்லை எனக்கு. முதல் முறை மீண்டும் இந்தப் பத்திக்கு வந்து என் கருத்தை மாற்றி எழுதுகிறேன்.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jan
08
    
ஸ்ரீ - Category அசைபோடுகிறேன் in 2008

ஸ்ரீயாகிய நான் 1

ரொம்ப நாள் கழிச்சு சொந்த கதை எழுதலாம்னு உக்காந்தா ஒன்னுமே தோணமாட்டேங்குது. என்னடா இது இருக்குற எல்லா டுபாக்கூர் வேலையும் பண்ணோமே ஆனா எதுவுமே நினைவுக்கு வரலையே அப்டின்னு ஒரே பீலிங்ஸா போச்சு. ஆஃபீஸ்ல மானாவாரியா வேலை செஞ்சி எல்லாம் மறந்து போச்சுப்பான்னு நானே ஒரு பொய்ய சொல்லி என்னையே சமாதானப்படுத்திக்கிட்டு இருந்த நேரம் தான் இந்த விஷயம் ஸ்ரைக் ஆச்சு.

ஏற்கனவே சொன்னா மாதிரி நான் ஒரு சூப்பரான ஸ்கூல்ல சுமாரா படிச்சிக்கிட்டு (நம்பித்தான் ஆகணும் வேற வழி இல்லை ஏன்னா கதை சொல்றது நானு) இருந்தேன். அங்க எல்லாத்தையும் படிச்சி கிழிச்சிட்டு காலேஜை பாக்க போயிட்டேன். அம்மா அடிக்கடி ஒன்னு சொல்லுவாங்க “டேய் புது தொடப்பம் நல்லாத் தான் பெருக்கும்”னு.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Aug
23
    
ஸ்ரீ - Category அசைபோடுகிறேன் in 2007

ஸ்ரீயாகிய நான் 1

ஸ்ரீயாகிய நான் 2

எப்படியோ ஒரு வழியா +2 பரிச்சை முடிச்சிட்டேன். அப்புறம் என்டரன்ஸ்னு ஒன்னு எழுதனும்னு சொன்னாங்க. நமக்கு தான் பரிச்சை பயமே இல்லையே (ரிசல்ட் பயம் மட்டும் தான்) சரி கழுதை எழுதிட்டா போச்சுனு ரெடியானேன். என் அம்மாவுக்கு பையன் மெட்ராஸ்ல ‘எக்ஸல்’ல படிச்சா பெரிய ஆளா வருவானு தோனிடுச்சு, அடுத்த வாரமே எக்ஸல் விஜயம். சும்மா சொல்ல கூடாதுங்க பெத்தவங்க எது பண்ணாலும் சரியா தான் இருக்கும். அட அட அட என்னா ஃபிகருங்க?
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Aug
08
    
ஸ்ரீ - Category அசைபோடுகிறேன் in 2007

ஸ்ரீயாகிய நான் 1

ம்… இப்போ ஒரு நிலைமைக்கு வந்தாச்சுங்க ஸ்கூல்ல. ஏன்னா வயசுக்கு வந்தவங்க கம்மி அப்போ (அர்த்தம் புரியாதவங்க முதல் பாகம் படிக்கவும்). அடுத்த கட்ட முயற்சியா அழகா முடிவெட்டினேன் ‘நம்மவர்’ கரண் மாதிரி. எல்லா ஜூனியர் பசங்களும் ஆர்வமா பாப்பானுங்க. எத்தனையோ பேருக்கு நான் ரோல் மாடலா இருந்திருக்கேன். அதனால பீ.இ.டீ வாத்திக்கு என் மேல கொஞ்சம் கான்டு. ஒரு மேச்சு சரியா விளையாடலைனு கத்துனான் நான் “போடா ஹேர்”னு பேட்ட தூக்கி போட்டுட்டு போயிட்டேன். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா பின்னாடி ஒரு பெரிய ஆப்பு வெச்சுட்டான் அவன்.


Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
31
    
ஸ்ரீ - Category அசைபோடுகிறேன் in 2007

தப்பா நினைக்காதீங்க. பசங்க எப்போ வயசுக்கு வராங்கனு தெரியமாட்டேங்குதே! ஆனா பசங்க தண்ணி அடிக்க ஆரம்பிச்சா வயசுக்கு வந்தா மாதிரினு சொல்லுவாங்க. நான் வயசுக்கு வந்தது 12‍th படிக்கும் போது தான். கொஞ்சம் லேட் இல்ல? அப்போ கொஞ்சம் படிப்பாளி நான், இதெல்லாம் தெரியாது. எக்ஸ்கர்சன் அப்டின்ற பேருல வாத்தியாருங்க ஊரு சுத்த கூட்டிக்கிட்டு போவாங்க. அந்த வருசம் மெட்ராஸ் போலாம்னு சொன்னாங்க. கிளாஸ் கவனிக்காம சும்மா பின்னாடி பென்சுல பேசுரத கேட்டேன் அவனுங்க எனக்கு முன்னாடியே வயசுக்கு வந்துட்டானுங்க போல பீரை பத்தி பேசிகிட்டு இருந்தானுங்க. எனக்கு ஆசை வந்துடுச்சு சரி என்ன தான் இருக்குனு பாக்கலாமேனு அவனுங்க கிட்ட கெஞ்சுனேன். அவனுங்க சரி ஆனா நீ தான் வாங்கிட்டு வரணும்னு சொல்லிடானுங்க பாவிங்க. உடனே மாஸ்டர் பிளான் போட்டோம் நானும் என் பிரண்டு ஓணானும். அன்னிக்கு ராத்திரி தான் ஆபரேசன் பீர்.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
30
    
ஸ்ரீ - Category அசைபோடுகிறேன் in 2007

நண்பர்களே!

ரொம்ப நாள் கழிச்சு நான் படித்த கல்லூரி பக்கம் போயிருந்தேன். பின் நோக்கி போகிற சுகமே தனி தான். முதல்ல போக‌ணுமானு தான் யோசித்தேன். நான் காதல் பழகிய அந்த அழகான உலகத்த மறுபடியும் பாக்க ஏதோ என்ன இழுத்துட்டு போயிடுச்சு. என்கிட்ட நல்லா பழகுனவங்களை மட்டும் பாத்துட்டு வந்துடலாம்னு போனா அங்க எல்லாரும் அவர் ரூம்ல தான் இருக்காங்க. என்ன உருப்பட மாட்டடானு திட்டுனவங்க தான் என்ன பார்த்து சந்தோஷப் பட்டாங்க. எங்கயோ படிச்ச ஞாபகம் “வெளியேறியது பறவை, கூண்டுக்கு விடுதலை“.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!