Nov
12
    
ஸ்ரீ - Category காதல், கொலைவெறி, சோகம் in 2008

“எனக்கே தெரியாமல் தூக்கத்தில் இறந்துவிடுவேன்” என்கிற அற்பசந்தோஷத்தில் படுக்கைக்கு போவதும், விடியலில் “ஏதோ ஒரு சின்ன ஊடல், இன்று பேசிவிடுவாள்” என்ற நம்பிக்கையில் எழுபவனுமாக இருந்துவிட்டேன் கடந்த சில வருடங்களாய். ஏனோ இந்த கணம் எனக்குள் வேரூன்றத்தொடங்கிற்று உருவமில்லா ஒரு அசெளகரியம். பிரிவுகள் சில நேரம் எதிர்பாராமல் நடந்தேறிவிடுகின்றன. நினைவுகளில் இருந்து இன்னும் உன்னை ஷேராட்டோவில் ஏற்றி திரும்பி பாராமல் நடந்த அந்த அந்தி மட்டும் விலக மறுத்து புத்தி முழுதும் வியாபித்திருக்கிறது. பிரிவுக்கு காரணம் ஏராளம் கற்பிக்க முடியும் மூளையால். ஏற்றுக்கொள்ள விருப்பமற்ற மனம் “காதலிக்கிறேன் தொந்தரவு செய்யாதே!” என்கிறது. புரிய வைக்க வேண்டியவன் நான். எனக்கு பிரிவுக்கான காரணம் தர வேண்டியவள் நீ.

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
16
    

சிறு தாவணி வயசுல
சிட்டாட்டம் நீ பறந்த
சிறு கிராமம் நான் பாக்க
போன கதை சொல்லட்டுமா?

தெக்கால நாம நட்ட
தென்னையில சீவனில்லை,
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
19
    
ஸ்ரீ - Category கொலைவெறி in 2008


வழக்கமான எனது பதிவு என நினைத்து படிக்க வந்த நண்பரா நீங்க? இந்த வாரம் பதிவு கீழ இருக்கு. அதை படிச்சிட்டீங்கனா அப்போ அடுத்த புதன் கிழமை பார்க்கலாம் சகா போய்டு வாங்க :) .



இது வழக்கமா நான் எழுதும் கொலைவெறிப்பதிவு இல்லை. இது அதுக்கு மேல பல மடங்கு கோவத்துல எழுதுற பதுவு. வலைப்பதிவு முழுசா தசாவதாரம் தான். நான் வலை தொடங்கி ஒரு வருஷம் ஆச்சு ஆனா இன்னைக்கு வரை யாரையும் தாக்கியோ, அடுத்தவர் பதிவுகளை குறை கூறியோ ஒரு வரி கூட எழுதியது இல்லை. முதல் முறை இந்த மாதிரி பதிவு எழுதுறேன். விமர்சனம் என்றால் என்ன? இருக்குற நிறை குறை இரண்டையும் எழுதுறது தான? அதென்ன தசாவதாரத்தில் ஒரு நிறை கூடவா சில பதிவர்களுக்கு கிடைக்கலை? நான் பிறப்பில் இருந்தே கமல் வெறியன்.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
04
    
ஸ்ரீ - Category காதல், கொலைவெறி, சோகம் in 2008

கடவுளும் கண்ணயறும் நேரம். பார்ப்பவர்கள் கண்களுக்கு என் தனிமை மட்டுமே தெரிய என் காதலோடு தோளோடு தோள் உரசியபடி நான். விட்டமில்லாத அறை, வெறித்துப்பார்க்க பொருட்களில்லை. சுற்றியுள்ள அத்தனையும் காதல் சின்னங்கள். எல்லாமே நீ உதரி விட்டுப் போனவை என் உயிர் உட்பட. மின்விசிறியைக் காட்டிலும் வேகமாகச் சுழலும் நினைவுகள், இதயத்துடிப்பை விட சத்தமான மெளனம். தனிமையோடு பேசிக்கொண்டிருக்கிறேன். வெறுமை வெறுப்பேற்ற கதறியழ முயற்சிக்கிறேன். கண்ணீர் துடைக்க கைகளில்லாத நேரம் அழுதும் லாபமில்லை.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Apr
23
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், கொலைவெறி in 2008

அழகானவைகளின் பட்டியல் கொஞ்சம் நீண்டு கொண்டே தான் போகும்। ஆனால் நிச்சயம் பூக்களும் பெண்களும் முதலிரண்டு இடங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆகியிருப்பர். பூ அழகானது, பெண் அழகாக்கப்பட்டவள். இரண்டைப்பற்றியும் எழுத ஆரம்பித்தால் முற்றுப்புள்ளிக்கு அவசியம் இருக்காது. எத்தனை நாள் தான் இரண்டையும் எழுத முயற்சிப்பது? அந்த களத்தில் இருந்து சற்று விலகி இதோ எழுத உட்காருகிறேன்.

எப்போது எழுத ஆரம்பித்தாலும் சில பொருட்கள் நம் நினைவில் நிழலாடும். சிலருக்கு அது மயில், சிலருக்கு மேகம், சிலருக்கு பெண். எனக்கு என்றைக்குமே அது வண்ணத்துப்பூச்சி.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jan
29
    
ஸ்ரீ - Category கட்டுரை, பிப்ரவரி 2008 in 2008
இந்த மாதம் காதல் மாதமாகத் தான் பார்க்கப்படுகின்றது. நானும் வேலண்டைன் பற்றி ஒரு பதிவு போடலாம் என்று தான் இருந்தேன். அதை யாராவது என்னை விட சிறப்பாக செய்வார்கள் என்கிற நம்பிக்கையில் கைவிட்டு வேறு ஏதாவது எழுதலாம் என யோசித்த நேரம் தான் வரலாற்றில் இருந்து ஒரு காதல் ஜோடியைப் பற்றிய தகவல் தந்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. வழக்கம் போல லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், மும்தாஜ் ஷாஜகான் என தான் யோசித்தேன்.

ஆனால் காதலுக்கும் வேறு ஒரு பரிமாணம் இருக்கின்றது! அந்த வகையில் என்னை மிகவும் கவர்ந்த காதலர்கள் வரிசையில் முதலில் வருவது ஹிட்லர் - ஈவா ப்ரான். காதலா? ஹிட்லரா? அவருக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் ஹிட்லரின் காதல் என்னை கவர்ந்ததற்கு காரணம் ஹிட்லர் அல்ல ஈவா. Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Sep
11
    
ஸ்ரீ - Category கதை, காதல் in 2007



“மஞ்சுளா பரிட்சை முடிஞ்சதும் வெளியில நில்லு அண்ணன் வந்து கூட்டிக்கிட்டு வந்திடுவான். சாயந்தரம் பொண்ணு பாக்க வராங்க.” அம்மா

செல்வதை காதில் போட்டுக்கொள்ளாமல் தயாரானாள். தோழிகள் பாடத்தை அசைப்போட்டுக்கொண்டு வர மஞ்சுளா வாடிய முகத்தோடு நடந்து

சென்றாள். பரிட்சை மணி அடிக்க 15 நிமிடங்கள் மீதம் கடிகார முட்கள் வேகமாக பாய்ந்தன. சைக்கிளில் ரெக்கை கட்டி பறந்து வந்தான் சிவா.

“எப்படி படிச்சிருக்க?” மஞ்சுளாவிடம் கேட்க, அவள் கண்ணில் குளம்.

“என்ன ஆச்சு?”

“என்னை பொண்ணு பாக்க வராங்க.”

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Aug
28
    
ஸ்ரீ - Category கவிதை, காதல் in 2007

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Aug
16
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2007

உன்னில் காதல் படித்தேன்,
சிணுங்கலுக்கு வரியமைத்தேன்,
மெளனத்துக்கும் தலையசைத்தேன்.

கண் வழிபுகுந்து கனவுகளுக்கு
உயிர் கொடுத்தேன்,
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Aug
14
    
ஸ்ரீ - Category கவிதை in 2007

ஏன் கொண்டாடுகிறாய்?
இனாமாய் கிடைத்த
விடுமுறைக்கா சந்தோஷப்படுகிறாய்?
சுதந்திரமா?
எங்கே காட்டு பார்ப்போம்.

சுவாசிக்கவே இன்னொருவனை
வேலைக்கு வைக்கும்
முதலாளி வர்கம்,
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!