Jun
02
    
ஸ்ரீ - Category ஜஸ்ட் மொக்கைஸ் in 2008

நேரா விஷயத்துக்கே வரேன். நல்ல மூடுல இல்லங்க அதான். இங்க நிறைய பதிவர்கள் என்ன மாதிரியே பொட்டி தட்டியா தான் இருப்பீங்க. இந்த மாசம் வந்தாலே மதிப்பிடுதல் (appraisal) நடக்கும்.

சிலருக்கு அது அப்ரெய்சல் பலருக்கு அது ‘ஆப்பு’ரைசல். உண்மையில வேலை செய்யுற இடத்துல தான் நல்லாவே காமெடி பண்றாங்க. மனசாட்சியே இல்லாம காமெடி பண்றானுங்க. உங்க எல்லாருக்கும் ஆப்புரைசல் டிப்ஸ் கொஞ்சம் குடுக்கலாம்னு ஒரு குட்டி பதிவு:

1. டேமேஜர் - You have to take up more responsibilities.


பதிலுக்கு நீங்களும், “ஆமாம் சார் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு கரெக்டு சார்.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jan
08
    
ஸ்ரீ - Category அசைபோடுகிறேன் in 2008

ஸ்ரீயாகிய நான் 1

ரொம்ப நாள் கழிச்சு சொந்த கதை எழுதலாம்னு உக்காந்தா ஒன்னுமே தோணமாட்டேங்குது. என்னடா இது இருக்குற எல்லா டுபாக்கூர் வேலையும் பண்ணோமே ஆனா எதுவுமே நினைவுக்கு வரலையே அப்டின்னு ஒரே பீலிங்ஸா போச்சு. ஆஃபீஸ்ல மானாவாரியா வேலை செஞ்சி எல்லாம் மறந்து போச்சுப்பான்னு நானே ஒரு பொய்ய சொல்லி என்னையே சமாதானப்படுத்திக்கிட்டு இருந்த நேரம் தான் இந்த விஷயம் ஸ்ரைக் ஆச்சு.

ஏற்கனவே சொன்னா மாதிரி நான் ஒரு சூப்பரான ஸ்கூல்ல சுமாரா படிச்சிக்கிட்டு (நம்பித்தான் ஆகணும் வேற வழி இல்லை ஏன்னா கதை சொல்றது நானு) இருந்தேன். அங்க எல்லாத்தையும் படிச்சி கிழிச்சிட்டு காலேஜை பாக்க போயிட்டேன். அம்மா அடிக்கடி ஒன்னு சொல்லுவாங்க “டேய் புது தொடப்பம் நல்லாத் தான் பெருக்கும்”னு.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Aug
23
    
ஸ்ரீ - Category அசைபோடுகிறேன் in 2007

ஸ்ரீயாகிய நான் 1

ஸ்ரீயாகிய நான் 2

எப்படியோ ஒரு வழியா +2 பரிச்சை முடிச்சிட்டேன். அப்புறம் என்டரன்ஸ்னு ஒன்னு எழுதனும்னு சொன்னாங்க. நமக்கு தான் பரிச்சை பயமே இல்லையே (ரிசல்ட் பயம் மட்டும் தான்) சரி கழுதை எழுதிட்டா போச்சுனு ரெடியானேன். என் அம்மாவுக்கு பையன் மெட்ராஸ்ல ‘எக்ஸல்’ல படிச்சா பெரிய ஆளா வருவானு தோனிடுச்சு, அடுத்த வாரமே எக்ஸல் விஜயம். சும்மா சொல்ல கூடாதுங்க பெத்தவங்க எது பண்ணாலும் சரியா தான் இருக்கும். அட அட அட என்னா ஃபிகருங்க?
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!