<< என் நெஞ்சிலே                   வளையலும் பெண் ஜாதி >>
 
Aug
20
    
ஸ்ரீ - Category கவிதை, காதல் in 2008
Add Comments

நிறங்களாலான ஓவியமே
பார்த்துப் பழகியவனுக்கு
நிறமிகளாலான* ஓவியம்
உன்னை சந்திக்கையில்
பேச்சு குளறுவது இயற்கை தான்.



*

கதைத்தபடியே
மணலில் விரல் கொண்டு வரைகிறாய்.
வழியும் வெட்கப் பாசனத்தால்
கடற்கரையில் சாகுபடியாகிறது
காதல்…



*

வாசலில் நீயிடும் கோடுகள்
ஓவியம் ஆனதையும்,
என் தூரிகை எழுதிய ஓவியங்கள்
கோடுகள் ஆவதையும்
காதலிடம் முறையிடவாவது
காதலிப்போமா?



*

ஒரே உதட்டுச்சாயம் உபயோகி,
அறிவியலை பொய்யாக்குவதில்
உடன்பாடில்லை எனக்கு.
எந்தத் தாவரமும்
தினமொரு வண்ணத்தில் பூக்காது.



*

நுதலோடு நுதல்* மோதி
எனக்கு நீ வைத்த பொட்டை விடவா
அழகாய் ஓவியம் தீட்டியிருப்பார் பிக்காசோ?



*

அரைப்புள்ளி வாக்கியங்களுக்கும்,
முற்றுப்புள்ளி ஓவியங்களுக்கும்
என்பதில் இது நாள் வரையில்
மாற்றுக்கருத்தில்லை எனக்கு.
உன்னை வரைந்தவன்
அரைப்புள்ளி இட்டதால் தானோ
நொடிக்கொரு தரம்
அழகாகிக்கொண்டே போகிறாய்?



*

(நிறமி - Chromosome.
நுதல் - நெற்றி.)

*

காதல் அழிவதில்லை…
-ஸ்ரீ.

Few related Posts

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!




sri on August 20th, 2008 at 9:46 am

naan dhaan first??


sri on August 20th, 2008 at 9:53 am

அச்சச்சோ என்ன அண்ணா இது ஒரே ஓவியத்தப் பத்தி சுத்தி சுத்தி எழுதீருக்கீங்க..!! :)
எதாவது ஓவிய கண்காட்சி போனீங்களா?? ;)


sri on August 20th, 2008 at 9:54 am

//நிறங்களாலான ஓவியமே
பார்த்துப் பழகியவனுக்கு
நிறமிகளாலான* ஓவியம்
உன்னை சந்திக்கையில்
பேச்சு குளறுவது இயற்கை தான்.//

அப்படியா?? ;)


sri on August 20th, 2008 at 9:59 am

//அரைப்புள்ளி வாக்கியங்களுக்கும்,
முற்றுப்புள்ளி ஓவியங்களுக்கும்
என்பதில் இது நாள் வரையில்
மாற்றுக்கருத்தில்லை எனக்கு.
உன்னை வரைந்தவன்
அரைப்புள்ளி இட்டதால் தானோ
நொடிக்கொரு தரம்
அழகாகிக்கொண்டே போகிறாய்?//

முடிவா என்னத்தான் சொல்லவரீங்க?? ;)


sri on August 20th, 2008 at 10:02 am

//நுதலோடு நுதல்* மோதி
எனக்கு நீ வைத்த பொட்டை விடவா
அழகாய் ஓவியம் தீட்டி இருப்பார் பிக்காசோ?//
இத அவர் கிட்ட தான் கேட்கனும்..!! :P ஆனா நல்லாருக்கு..!! :)


RamyaRamani on August 20th, 2008 at 10:28 am

\\வாசலில் நீயிடும் கோடுகள்
ஓவியம் ஆனதையும்,
என் தூரிகை எழுதிய ஓவியங்கள்
கோடுகள் ஆவதையும்
காதலிடம் முறையிடவாவது
காதலிப்போமா?
\\

அட Technique எல்லாம் நல்லாத்தேன் இருக்கு :)

\\நுதலோடு நுதல்* மோதி
எனக்கு நீ வைத்த பொட்டை விடவா
அழகாய் ஓவியம் தீட்டி இருப்பார் பிக்காசோ?
\\
ஆஹா கலக்கறீங்களே..சுப்பரு..

புது வார்த்தையெல்லாம் சொன்னதுக்கு நன்றி :)


naanal on August 20th, 2008 at 11:23 am

//கதைத்தபடியே
மணலில் விரல் கொண்டு வரைகிறாய்.
வழியும் வெட்கப் பாசனத்தால்
கடற்கரையில் சாகுபடியாகிறது
காதல்… //

கடற்கரையில் சாகுபடியா ….
வித்தியாசமா இருக்கே?


naanal on August 20th, 2008 at 11:26 am

//அரைப்புள்ளி வாக்கியங்களுக்கும்,
முற்றுப்புள்ளி ஓவியங்களுக்கும்
என்பதில் இது நாள் வரையில்
மாற்றுக்கருத்தில்லை எனக்கு.
உன்னை வரைந்தவன்
அரைப்புள்ளி இட்டதால் தானோ
நொடிக்கொரு தரம்
அழகாகிக்கொண்டே போகிறாய்?//

அட நல்லா இருக்கு ஸ்ரீ…
உங்க கவிதை நாயகியும் உங்கள் கவிதையும் மிக மிக அழகா இருக்கு… :)


naanal on August 20th, 2008 at 11:26 am

இன்று இரண்டு புது வார்த்தை… :)


kavithai rasigan... on August 20th, 2008 at 12:19 pm

“அரைப்புள்ளி வாக்கியங்களுக்கும்,
முற்றுப்புள்ளி ஓவியங்களுக்கும்
என்பதில் இது நாள் வரையில்
மாற்றுக்கருத்தில்லை எனக்கு.”
i cant understand this… may be ur word is missing


கோபிநாத் on August 20th, 2008 at 12:47 pm

\\கதைத்தபடியே
மணலில் விரல் கொண்டு வரைகிறாய்.
வழியும் வெட்கப் பாசனத்தால்
கடற்கரையில் சாகுபடியாகிறது
காதல்… \\

சூப்பரு ;))


Ravishankar on August 20th, 2008 at 1:55 pm

maplai antha sagupadi kavithati thaaru maaru keep rockin :)


M.Saravana Kumar on August 20th, 2008 at 4:17 pm

//வாசலில் நீயிடும் கோடுகள்
ஓவியம் ஆனதையும்,
என் தூரிகை எழுதிய ஓவியங்கள்
கோடுகள் ஆவதையும்
காதலிடம் முறையிடவாவது
காதலிப்போமா?//

கலக்கல்
:)


aruna on August 20th, 2008 at 6:24 pm

Somehow I’m learning a lot of new words from u Shree!…Keep it up..
anbudan aruNa


Z on August 20th, 2008 at 10:36 pm

:)))


மஹாராஜா.க on August 21st, 2008 at 9:26 am

ஹே.. இந்த வாரம்.. டாப்பு.. டக்கரு..சூப்பர்..பலே.
நீ கொளுத்து நைனா.. உங்க கவிஜயை படிச்சாலே ஒரே குஜாலாகீது பா..


மஹாராஜா.க on August 21st, 2008 at 9:28 am

வரிகளை படிக்கும் பொது ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்ல..
உண்மையாகவே ரொம்ப நல்ல வரிகள் அனைத்தும்..
புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா..


மஹாராஜா.க on August 21st, 2008 at 9:29 am

//நிறங்களாலான ஓவியமே
பார்த்துப் பழகியவனுக்கு
நிறமிகளாலான* ஓவியம்
உன்னை சந்திக்கையில்
பேச்சு குளறுவது இயற்கை தான்.//

hehehehe… nalla irukku pa..


மஹாராஜா.க on August 21st, 2008 at 9:35 am

//கதைத்தபடியே
மணலில் விரல் கொண்டு வரைகிறாய்.
வழியும் வெட்கப் பாசனத்தால்
கடற்கரையில் சாகுபடியாகிறது
காதல்…
//

வேணாம் .. வலிக்குது அழுதுடுவேன்
என்னமா யோசிகிறாங்க.. உட்டா ஒரு விவசாயமே பண்ணிடுவாங்க போல..


மஹாராஜா.க on August 21st, 2008 at 9:37 am

//வாசலில் நீயிடும் கோடுகள்
ஓவியம் ஆனதையும்,
என் தூரிகை எழுதிய ஓவியங்கள்
கோடுகள் ஆவதையும்
காதலிடம் முறையிடவாவது
காதலிப்போமா?

*

ஒரே உதட்டுச்சாயம் உபயோகி,
அறிவியலை பொய்யாக்குவதில்
உடன்பாடில்லை எனக்கு.
எந்தத் தாவரமும்
தினமொரு வண்ணத்தில் பூக்காது.

//

இது ரெண்டும் நல்லா இருக்கு ஸ்ரீ.


மஹாராஜா.க on August 21st, 2008 at 9:38 am

//நுதலோடு நுதல்* மோதி
எனக்கு நீ வைத்த பொட்டை விடவா
அழகாய் ஓவியம் தீட்டியிருப்பார் பிக்காசோ?

//

உங்களுக்கு யாரையாச்சும் வம்புக்கு இழுக்கலைனா தூக்கமே வராதா..?


திவ்யா on August 21st, 2008 at 9:41 am

\\கதைத்தபடியே
மணலில் விரல் கொண்டு வரைகிறாய்.
வழியும் வெட்கப் பாசனத்தால்
கடற்கரையில் சாகுபடியாகிறது
காதல்… \\

ரசித்தேன் இவ்வரிகளை,

புது புது வார்த்தைகளுடன்……கவிதை வழக்கம்போல் அழகு:)))

வாழ்த்துக்கள் ஸ்ரீ!!


ஸ்ரீ on August 21st, 2008 at 11:10 am

@ sri

//naan dhaan first??//

:)

//அச்சச்சோ என்ன அண்ணா இது ஒரே ஓவியத்தப் பத்தி சுத்தி சுத்தி எழுதீருக்கீங்க..!!
எதாவது ஓவிய கண்காட்சி போனீங்களா??//

என்னது கண்காட்சியா? எனக்கு தான் பகல்லையே பசுமாடு தெரியாதே அங்க போய் நான் என்ன பண்ணப்போறேன்?

//அப்படியா?? //

என்னது மறுபடியும் அப்படியா? கைப்புள்ள எடுடா வண்டிய.

//முடிவா என்னத்தான் சொல்லவரீங்க?? //

என்னது முடிவா? அதான் அந்த ஓவியத்துக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்காததால் தான் அழகாகிட்டே போகுதுன்னு தம்பி பீலிங்ஸ் பண்றாரு.

//இத அவர் கிட்ட தான் கேட்கனும்..!! ஆனா நல்லாருக்கு..!! //

அப்படியா? நன்றிஸ் ஹைஸ் ;)


Sri on August 21st, 2008 at 11:33 am

//என்னது மறுபடியும் அப்படியா? கைப்புள்ள எடுடா வண்டிய.//

என்ன மிரட்டறீங்க..!! :(

//என்னது முடிவா? அதான் அந்த ஓவியத்துக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்காததால் தான் அழகாகிட்டே போகுதுன்னு தம்பி பீலிங்ஸ் பண்றாரு//

யார் தம்பி?? ;)


Senthil Kumar on August 21st, 2008 at 11:53 am

//கதைத்தபடியே
மணலில் விரல் கொண்டு வரைகிறாய்.
வழியும் வெட்கப் பாசனத்தால்
கடற்கரையில் சாகுபடியாகிறது
காதல்… //

அருமை ஸ்ரீ…


Senthil Kumar on August 21st, 2008 at 11:54 am

//வாசலில் நீயிடும் கோடுகள்
ஓவியம் ஆனதையும்,
என் தூரிகை எழுதிய ஓவியங்கள்
கோடுகள் ஆவதையும்
காதலிடம் முறையிடவாவது
காதலிப்போமா?//

பிண்றீங்க பிண்றீங்க …


Senthil Kumar on August 21st, 2008 at 11:55 am

//ஒரே உதட்டுச்சாயம் உபயோகி,
அறிவியலை பொய்யாக்குவதில்
உடன்பாடில்லை எனக்கு.
எந்தத் தாவரமும்
தினமொரு வண்ணத்தில் பூக்காது//

என்னமா யோசிக்கிறீங்க…


Senthil Kumar on August 21st, 2008 at 11:57 am

//நுதலோடு நுதல்* மோதி
எனக்கு நீ வைத்த பொட்டை விடவா
அழகாய் ஓவியம் தீட்டியிருப்பார் பிக்காசோ?//

என்னமா யோசிக்கிறீங்க…
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ஸ்ரீ on August 21st, 2008 at 4:31 pm

@ RamyaRamani

//அட Technique எல்லாம் நல்லாத்தேன் இருக்கு//

ஹி ஹி எல்லாம் ஒரு முயற்சி தானே!

//ஆஹா கலக்கறீங்களே..சுப்பரு..

புது வார்த்தையெல்லாம் சொன்னதுக்கு நன்றி //

இதுக்கெல்லாம் எதுக்குங்க நன்றி? :) டேங்க்ஸ்


ஸ்ரீ on August 21st, 2008 at 4:35 pm

@ naanal

//கடற்கரையில் சாகுபடியா ….
வித்தியாசமா இருக்கே?//

ஒரே மாதிரி எழுத எனக்கே பிடிக்கலைங்க நாணல் அதான் லூசுத்தனமா எழுதுறேன் கண்டுக்காதீங்க :)

//அட நல்லா இருக்கு ஸ்ரீ…//

அட நல்லா இருக்கா? எனக்கு தோசை தாங்க பிடிக்கும் ;)

//உங்க கவிதை நாயகியும் உங்கள் கவிதையும் மிக மிக அழகா இருக்கு… //

அதெப்படிங்க நானே அவங்களை பாக்கலை நீங்க அழகா இருக்கறதா சொல்றீங்க? சரி அடுத்த முறை பாத்தா அவங்களை சீக்கிரமா வர சொல்லுங்க. வாழ்க்கை போர் அடிக்குது.

//இன்று இரண்டு புது வார்த்தை… //

:D என்னைக்கேட்டால் நாம் உபயோகிக்காமல் தூசு ஏறிப்போய் நிறைய அழகான வார்த்தைகள் தமிழில் இருக்கு. எனக்கு அப்படி ஏதாவது தெரிஞ்சா நிச்சயமா அதை வெளியிடுறேன். நன்றி.


ஸ்ரீ on August 21st, 2008 at 4:40 pm

@ kavithai rasigan…

//i cant understand this… may be ur word is missing//

மன்னிக்கணும் ரசிகன். எந்த வார்த்தையும் விடுபடவில்லை. வாங்கியங்களில் தொடர அரைப்புள்ளி (Comma) வைப்போம் ஆனால் ஓவியங்கள் அப்படி இல்லை எல்லா ஓவியங்களும் முழுமையாய் இருக்கும் அதான் ஓவியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள் என்று சொன்னேன். அவள் நாளுக்கு நாள் அழகாகிக்கொண்டே போவதால் அவள் அரைப்புள்ளி வைக்கப்பட்ட ஓவியம் என்றேன். புரியாத வண்ணம் எழுதியது என் பிழை தான் மன்னிக்கவும். நன்றி.


ஸ்ரீ on August 22nd, 2008 at 8:21 am

@ கோபிநாத்

//சூப்பரு//

நன்றி ஹை மாப்பி.


ஸ்ரீ on August 22nd, 2008 at 8:23 am

@ Ravishankar

//maplai antha sagupadi kavithati thaaru maaru keep rockin //

டேங்க்சுப்பா ரவி


ஸ்ரீ on August 22nd, 2008 at 8:25 am

@ M.Saravana Kumar

//கலக்கல்//

வாங்க குமார் நல்லா இருக்கீயளா? நன்றி


ஸ்ரீ on August 22nd, 2008 at 8:27 am

@ aruna

//Somehow I’m learning a lot of new words from u Shree!…Keep it up..
anbudan aruNa//

ஆஹா டீச்சரம்மாவுக்கு நான் சொல்லித்தரேனா? அப்படி எல்லாம் ஒன்னும் இல்லக்கா. நானும் இப்போது தான் தெரிஞ்சிக்கிறேன் அதை ஏதாவது கவிதையில் போட்டு தர முயற்சிக்கிறேன் அவ்வளவு தான். நன்றீஸ் ;)


ஸ்ரீ on August 22nd, 2008 at 8:28 am

@ Z

//:)))//

சிரிங்கப்பா சிரிங்க. நல்லா சிரிங்க. அட சிரிங்க. இன்னும் மூணே வருசம் தான் பூமாதேவி சிரிக்க போறா நாம எல்லாம் உள்ள போகப்போறோம். சிரிங்க. அட சிரிங்க


ஸ்ரீ on August 22nd, 2008 at 8:35 am

@ மஹாராஜா.க

//ஹே.. இந்த வாரம்.. டாப்பு.. டக்கரு..சூப்பர்..பலே.
நீ கொளுத்து நைனா.. உங்க கவிஜயை படிச்சாலே ஒரே குஜாலாகீது பா..//

ஹி ஹி நன்றி ராஜா. வாட் இஸ் மெண்ட் பை குஜால்ஸ்? “குஜால்ஸ்” அருஞ்சொற்பொருள் தருக :P

//வரிகளை படிக்கும் பொது ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்ல..
உண்மையாகவே ரொம்ப நல்ல வரிகள் அனைத்தும்..//

மிக்க நன்றி மக்கா.

//புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா..//

என்னத்த யோசிச்சு என்ன செய்ய? எப்படி யோசிச்சாலும் தான் கரெக்ட்டா ஏதாவது சொல்லி கலாஞ்சிடுறியே? ;)

//hehehehe… nalla irukku pa..//

டேங்க்கூ. நீங்க தான் கரெக்ட் ட்யூனிங்-ல இருக்கீங்க என்னோட ஏன்னா எனக்கும் அந்த கவிதை தான் ரொம்ப பிடிச்சிருக்கு.

//வேணாம் .. வலிக்குது அழுதுடுவேன்
என்னமா யோசிகிறாங்க.. உட்டா ஒரு விவசாயமே பண்ணிடுவாங்க போல..//

எத்தனை தடவை சொல்றது சிங்கங்கள் அழக்கூடாது. கண்ணை தொடச்சிக்கோ. ஹே ஹே நாங்கெல்லாம் யாரு விரலாலேயே உழுது முத்தத்தை பாசனமாக்கி ஊடலை உரமா போட்டு காதலை வளப்போம் எங்ககிட்டயேவா?

//இது ரெண்டும் நல்லா இருக்கு ஸ்ரீ.//

நீங்க சொன்னா சரி தான்.

//உங்களுக்கு யாரையாச்சும் வம்புக்கு இழுக்கலைனா தூக்கமே வராதா..?//

யப்பா பாருங்கப்பா அதை யாரு சொல்றான்னு. உங்களுக்கு கூட தான் என்ன வம்புக்கு இழுக்கலைன்னா தூக்கம் வராது போல :D


மஹாராஜா.க on August 22nd, 2008 at 10:07 am

குஜால்ஸ் = சந்தோசம்
சந்தோசம் = மகிழ்ச்சி.
மகிழ்ச்சி = புளங்காகிதம்
புளங்காகிதம் = பூரிப்பு.
பூரிப்பு = குஷி
குஷி = குஜால்ஸ்.

எப்புடி.. இது போதுமா.. இல்ல இன்னும் வேணுமா..?
உட்டால் நாங்க புக்கே போடுவோம்..


பிரியமுடன் பிரபு on August 24th, 2008 at 8:47 am

ஒரே உதட்டுச்சாயம் உபயோகி,
அறிவியலை பொய்யாக்குவதில்
உடன்பாடில்லை எனக்கு.
எந்தத் தாவரமும்
தினமொரு வண்ணத்தில் பூக்காது.

*

நுதலோடு நுதல்* மோதி
எனக்கு நீ வைத்த பொட்டை விடவா
அழகாய் ஓவியம் தீட்டியிருப்பார் பிக்காசோ?

/////////////////////

காதல் காதல் ரசம் வழியுது
(காதலிக்கிரீங்களா??)


ஸ்ரீ on August 25th, 2008 at 10:53 am

@ திவ்யா

//ரசித்தேன் இவ்வரிகளை,

புது புது வார்த்தைகளுடன்……கவிதை வழக்கம்போல் அழகு

வாழ்த்துக்கள் ஸ்ரீ!!//

வாழ்த்துக்கு நன்றிங்க திவ்யா


ஸ்ரீ on August 25th, 2008 at 10:55 am

@ Sri

//என்ன மிரட்டறீங்க..!! //

என்னது மிரட்டுறேனா? நான் தான்ம மிரண்டு போய் ஓடிக்கிட்டு இருக்கேன் நீ மிரட்டுறேன்னு சொல்லி என்னய ரெளடி ஆக்கிடுவ போல. அவ்வ்வ்வ்வ்

//யார் தம்பி?? //

அது கவிதையில வர தம்பி. நான் அண்ணனா இருக்கும் போது அவன் தம்பி. அவன் அண்ணனா இருக்கும் போது நான் கடைசி தம்பி. தேவையா இந்த குழப்பம்? :D


ஸ்ரீ on August 25th, 2008 at 11:00 am

@ Senthil Kumar

//அருமை ஸ்ரீ…//

நன்றிங்க செந்தில்.

//பிண்றீங்க பிண்றீங்க …//

அட நீங்க வேற என்னோட தலைய பின்னவே நேரம் கிடைக்காம சுத்திக்கிட்டு இருக்கேன் :P

//என்னமா யோசிக்கிறீங்க…
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

நோ பீலிங்ஸ். கூல் டவுன் கூல் டவுன் கூல் டவுன்.


ஸ்ரீ on August 25th, 2008 at 11:03 am

@ மஹாராஜா.க

//குஜால்ஸ் = சந்தோசம்
சந்தோசம் = மகிழ்ச்சி.
மகிழ்ச்சி = புளங்காகிதம்
புளங்காகிதம் = பூரிப்பு.
பூரிப்பு = குஷி
குஷி = குஜால்ஸ்.

எப்புடி.. இது போதுமா.. இல்ல இன்னும் வேணுமா..?
உட்டால் நாங்க புக்கே போடுவோம்..//

அய்யய்யோ ராஜா சும்மானாச்சுக்கும் கேட்டா இம்புட்டு பெரிய லிஸ்ட்டா. அதுல “புளங்காகிதம்” வார்ததையை கேட்டு வார இறுதி முழுக்க தூங்கலை :( பெரிய புலவரய்யா நீர்.


ஸ்ரீ on August 25th, 2008 at 11:11 am

@ பிரியமுடன் பிரபு

//காதல் காதல் ரசம் வழியுது//

நன்றி பிரபு. மொதல்ல சாம்பார் தான் வெக்க முயற்சித்தேன் அது தண்ணி அதிகமாகி ரசம் ஆகிடுச்சு (சும்மா சீரியசா எடுத்துக்காதீங்கோவ்)

//(காதலிக்கிரீங்களா??)//

இன்னாது? ஏங்க பிச்சு மனசுல நஞ்ச விதைக்கிறீங்க? :)


பிரியமுடன் பிரபு on August 25th, 2008 at 11:19 am

/////////////
இன்னாது? ஏங்க பிச்சு மனசுல நஞ்ச விதைக்கிறீங்க?////////////////
பிஞ்சு???????
நஞ்சு?????????????
யாரு நம்புரது???????


ஸ்ரீ on August 25th, 2008 at 1:16 pm

@ prabu

//பிஞ்சு???????
நஞ்சு?????????????
யாரு நம்புரது???????//

சரி சரி விடுங்க பிரபு சின்ன விஷயத்தை பெருசாக்காதீங்க ;)


மஹாராஜா.க on August 25th, 2008 at 4:09 pm

//
அதுல “புளங்காகிதம்” வார்ததையை கேட்டு வார இறுதி முழுக்க தூங்கலை :( பெரிய புலவரய்யா நீர்//

ayyo… en intha mega kola veri..?
naan etho naalavathu padikkum pothu enga vaaththiyaar sonna maathiri nabagm irunthathu.. athan summa potten.. neenga sonna piragu enakke santhegamaa irukku.. naan correct aaga thaane solli irukken..? :(

Neenga irukkum pothu naan ellam enga thalaiva..? vaaraththukku oru murai puthusu puthusaa varththai kandupudichu sollureenga..
neenga than pulavar..

“KATHAL AGARATHI” appadi endru oru bokku podunga.. aduththa thalaimurai makkalukku romba vasathiyaa irukkum kavithai ezhutha.. (athavathu engala pola aalungalukku.. :D)


ஸ்ரீ on August 26th, 2008 at 4:08 pm

@ மஹாராஜா.க

//ayyo… en intha mega kola veri..?
naan etho naalavathu padikkum pothu enga vaaththiyaar sonna maathiri nabagm irunthathu.. athan summa potten.. neenga sonna piragu enakke santhegamaa irukku.. naan correct aaga thaane solli irukken..?//

சரியா தான் ராஜா சொன்னீங்க. அழகான வார்த்தை “புளங்காகிதம்”. சும்மா லுல்லலாய்க்கு வெளாடுனேன்.

//Neenga irukkum pothu naan ellam enga thalaiva..? vaaraththukku oru murai puthusu puthusaa varththai kandupudichu sollureenga..
neenga than pulavar..//

அட ஏங்க நீங்க வேற எனக்கு தெரிஞ்சதை சும்மா டக்கால்ட்டி பண்ணி கவுஜைன்னு பேருல ஊர ஏமாத்திக்கிட்டு இருக்கேன்.

//“KATHAL AGARATHI” appadi endru oru bokku podunga.. aduththa thalaimurai makkalukku romba vasathiyaa irukkum kavithai ezhutha.. (athavathu engala pola aalungalukku.. :D)//

புக்கு நானு வெளங்கிடும். :D


gayathri on August 29th, 2008 at 6:21 pm

enna sri kavithilam eluthurega. kathalipathu epaadinu oru book poduga pa.


ஸ்ரீ on September 1st, 2008 at 2:08 pm

@ gayathri

//enna sri kavithilam eluthurega. kathalipathu epaadinu oru book poduga pa.//

நன்றிங்க காயத்ரி. காதலிப்பது எப்படின்னு தெரிஞ்சா நான் ஏங்க சும்மா ஒக்காந்து கவிதை எழுகிக்கிட்டு நேரத்தை கழிக்க போறேன்?


Vishnu on September 2nd, 2008 at 2:52 pm

கவிதை மிக அருமை …
வார்த்தைகளால் ஆனா வானவில் …


ஸ்ரீ on September 8th, 2008 at 11:42 am

@ Vishnu

//கவிதை மிக அருமை …
வார்த்தைகளால் ஆனா வானவில் …//

வாங்க விஷ்ணு ரொம்ப நன்றி கருத்துக்கு.

Post a comment
         Please fill in the fields marked with *.
*Name: 
*Email:   (Will not be published.)
URL: 
*Comments: