<< எழுபது விநாடி கடிகாரம்                   காதல் ஓவியம் >>
 
Aug
13
    
ஸ்ரீ - Category பாடல் முயற்சி in 2008
Add Comments

அலுவலகத்தில் வேலை செய்வது போல நடித்துக்கொண்டிருந்த நேரம் இம்சையரசி ஒரு கன்னட பாட்டுக்கு அவங்க வரிகள் எழுதியதை சொல்லி, என்னையும் எழுதுமாறு உசுப்பிவிட்டாங்க. நான் எழுதிய‌ பாட்டின் வரிகள் கீழே. இசையோடு சேருதான்னு மற்றவர்கள் தான் சொல்லணும். இதற்கு முன் நிறைய பாடல்களுக்கு தமிழ் வரிகள் எழுதி இருந்தாலும் இதைத் தவிற மற்ற எதையும் தட்டச்சு செய்து வெளியிடவில்லை. இது சும்மா லுல்லுலாய்க்கு…

 
icon for podpress  Standard Podcast: Play Now | Play in Popup | Download


என் நெஞ்சிலே என் நெஞ்சிலே
நேசத்தின் விதை வீழ்ந்ததே!
என் நெஞ்சிலே என் நெஞ்சிலே
உன் பிம்பம் துளிர்க்கின்றதே!


விழியாலே கொலை செய்யும் கொலைகாரி நீ
நான் எதிர்க்காமல் தினம் உந்தன் பலியாகிறேன்
உன்னை விலகாமல் உயிர்வாழும் நிழல் நானடி
நான் இருள் வந்தும் ஒளியாமல் தொடர்வேனடி

நீ வந்ததால் நீ வந்ததால்
உலகிங்கு அழகானதே!
நீ வந்ததால் நீ வந்ததால்
தமிழிங்கு கவிபாடுதே!

இரவெல்லாம் எரிகின்ற கண்கள் கொண்டு
நான் கொஞ்சம் குளிர்காய கூடாதோ?
சட்டென்று சூடாகும் இதழ்கள் தேடி
முத்தங்கள் நோகாமல் பறிப்பேனோ?

உன் பார்வைகள்
உன் சிணுங்கல்கள்
வலிக்காமல் உயிர் கிள்ளுதே!

நீ வந்ததால் நீ வந்ததால்
உலகிங்கு அழகானதே!

ஜனிக்கின்றேன் மடிகின்றேன் எல்லாம் உன்னால்
உன் பாத கொலுசுகள் ஸ்வரத்தாலே!
என் காதல் சமைக்கின்ற பெண்ணை பாட‌
புது காதல் அந்தாதி அமைப்பேனே!

மாவாரியில்* படகாகிறேன்
மெதுவாக கரை சேர்கிறேன்.

நீ வந்ததால் நீ வந்ததால்
தமிழ் இங்கு கவிபாடுதே!

விழியாலே கொலை செய்யும் கொலைகாரி நீ
நான் எதிர்க்காமல் தினம் உந்தன் பலியாகிறேன்
உன்னை விளகாமல் உயிர்வாழும் நிழல் நானடி
நான் இருள் வந்தும் ஒளியாமல் தொடர்வேனடி

உன் ஒருத்தியால் உன் ஒருத்தியால்
உடலின்றி உயிர் வாழ்கிறேன்.
உன் ஒருத்தியால் உன் ஒருத்தியால்
உயிரோடு சருகாகிறேன்.

 

(*வாரி = கடல்)

 

காதல் அழிவதில்லை…
-ஸ்ரீ.

 

No Related posts but have a look

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!




மஹாராஜா.க on August 13th, 2008 at 8:25 am

me the first..?


Ramya Ramani on August 13th, 2008 at 9:07 am

அடடா அடடா அடடா கலக்கறீங்களே ஸ்ரீ :))

\\விழியாலே கொலை செய்யும் கொலைகாரி நீ
நான் எதிர்க்காமல் தினம் உந்தன் பலியாகிறேன்
உன்னை விளகாமல் உயிர்வாழும் நிழல் நானடி
நான் இருள் வந்தும் ஒளியாமல் தொடர்வேனடி
\\

சூப்பரப்பு.. :)

Sonu Voice Soo Sweeeeett!!


Senthil Kumar on August 13th, 2008 at 9:56 am

பாடல வரிகள் நல்லா இருக்கு ஸ்ரீ…
ஆனால் என்னால் அந்த Audio-ஐ கேட்க முடியவில்லை…
இந்த பாட்டு எந்த படத்தில் வருகிறது…

(நாங்களும் நிறைய கன்னடப் பாட்டு கேட்க ஆரம்பிச்சுட்டோம்ல….)


மஹாராஜா.க on August 13th, 2008 at 9:59 am

//விழியாலே கொலை செய்யும் கொலைகாரி நீ
நான் எதிர்க்காமல் தினம் உந்தன் பலியாகிறேன்
உன்னை விளகாமல் உயிர்வாழும் நிழல் நானடி
நான் இருள் வந்தும் ஒளியாமல் தொடர்வேனடி

இரவெல்லாம் எரிகின்ற கண்கள் கொண்டு
நான் கொஞ்சம் குளிர்காய கூடாதோ?
சட்டென்று சூடாகும் இதழ்கள் தேடி
முத்தங்கள் நோகாமல் பறிப்பேனோ//

intha varigal asaththal… super appu…


naanal on August 13th, 2008 at 11:29 am

//நேசத்தின் விதை வீழ்ந்ததே!

உன் பிம்பம் துளிர்க்கின்றதே!//

//உன்னை விலகாமல் உயிர்வாழும் நிழல் நானடி
நான் இருள் வந்தும் ஒளியாமல் தொடர்வேனடி//

இந்த வரிகள் அருமை ஸ்ரீ…


naanal on August 13th, 2008 at 11:30 am

பாட்டு வரிகள் நல்லா இருக்கு…
என்ன அலுவலகத்தில் இசையை(கன்னட பாடலை ) கேட்க முடியவில்லை… :(


naanal on August 13th, 2008 at 11:31 am

வாரி = கடல்

இன்று ஒரு புது வார்த்தை கற்றேன் ..
நன்றி…


sri on August 13th, 2008 at 12:56 pm

நல்லாருக்கு..!! :-)


மஹாராஜா.க on August 13th, 2008 at 4:48 pm

Paadal ellam correct ah thaan irukku..
aanaal “Pallavi” “Saranam” ithu ellam enga enga varum endru potttu irukkanum.. etho motta thaaththa kuttaiyila uzhuntha maathiri irukku.. :D :P


ஸ்ரீ on August 13th, 2008 at 4:50 pm

@ மஹாராஜா.க

//me the first..?//

ஹா ஹா ஹா கடைசியா மொத சீட்ட புடிச்சிட்டீங்க போல பஸ்ஸுல?

//intha varigal asaththal… super appu…//

ஆஹா உடம்பு ஏதும் சரி இல்லையா ராஜா? வழக்கமான நக்கல் நையாண்டி குத்தல் குசும்பல் எகத்தாளம் எதையுமே காணுமே!!!! :D

ஒரு வேளை நல்லவரா மாறிட்டீங்களா? (இதுக்கு முன்னாடி ரொம்ப நல்லவரா இருந்தீங்கன்னு சொல்ல வந்தேன்).


ஸ்ரீ on August 13th, 2008 at 4:52 pm

@ Ramya Ramani

//அடடா அடடா அடடா கலக்கறீங்களே ஸ்ரீ

சூப்பரப்பு..//

நன்றிங்க ரம்யா.

//Sonu Voice Soo Sweeeeett!!//

ஆமாம் ரொம்ப அழகா பாடி இருக்காருங்க. எனக்கு புரியலைன்னாலும் ரொம்ப பிடிச்சு போச்சு பாட்டு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


ஸ்ரீ on August 13th, 2008 at 4:56 pm

@ Senthil Kumar

//பாடல வரிகள் நல்லா இருக்கு ஸ்ரீ…//

டேங்க்கூ செந்தில் சார்.

//ஆனால் என்னால் அந்த Audio-ஐ கேட்க முடியவில்லை…//

அச்சச்சோ! உங்கள் இணைய இணைப்பு கொஞ்சம் மெதுவா இருந்தா கொஞ்ச நேரம் ஆகும் பஃப்பர் ஆக. :(

//இந்த பாட்டு எந்த படத்தில் வருகிறது…//

படம்: மிலானா (Milana).
பாட்டு: நிந்நிந்தலே நிந்நிந்தலே.
பாடுனது: சோனு நிகாம்.

//(நாங்களும் நிறைய கன்னடப் பாட்டு கேட்க ஆரம்பிச்சுட்டோம்ல….)//

அப்படியா சூப்பரு. நான் கேட்ட ஒரே கன்னட பாட்டு இதான். நல்லா இருக்குங்க அங்க இருந்தவரை இது எதுவும் தெரியாமலே இருந்துட்டேன்.


Z on August 13th, 2008 at 6:46 pm

:))


ஸ்ரீ on August 14th, 2008 at 11:14 am

@ naanal

//இந்த வரிகள் அருமை ஸ்ரீ…

பாட்டு வரிகள் நல்லா இருக்கு…//

நன்றிங்க நாணல்.

//என்ன அலுவலகத்தில் இசையை(கன்னட பாடலை ) கேட்க முடியவில்லை… //

அச்சச்சோ அம்புட்டு கொடுமை பண்றாங்களா? :(

//இன்று ஒரு புது வார்த்தை கற்றேன் ..
நன்றி…//

நன்றி எல்லாம் எதுக்குமா? நான் சமீபத்தில் தெரிந்து கொண்ட வார்த்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள அதை வரிகளில் இணைத்து எழுதினேன். கருத்துக்கு நன்றி நாணல்.


ஸ்ரீ on August 14th, 2008 at 11:18 am

@ sri

//நல்லாருக்கு..!! //

நன்றிங்க மேடம்.


ஸ்ரீ on August 14th, 2008 at 11:26 am

@ மஹாராஜா.க

//Paadal ellam correct ah thaan irukku..
aanaal “Pallavi” “Saranam” ithu ellam enga enga varum endru potttu irukkanum.. etho motta thaaththa kuttaiyila uzhuntha maathiri irukku.. //

மக்களே பாருங்க. இவரை நல்லவன்னு பாராட்டி 4:50 க்கு பதில் பின்னூட்டம் நான் போட்டா. இவரு 2 நிமிஷத்துக்கு முன்னாடியே ஓடியாந்து கும்மியடிக்கிறாரு. பாட்டுல வந்தவரியே திரும்ப திரும்ப வந்தா பல்லவி. நடுல பெச்சா இருந்தா சரணம். பொதுவா 2 இல்லை 3 தான் சரணம் வரும் அதுக்கு மேல சரணம்னா ஐய்யப்பசாமி பஜனைக்கு தாங்க போகணும். நான் நிறைய பல்லவி முயற்சித்தேன் சரி எல்லாத்தையும் போட்டுடலாம்னு எல்லாத்தையும் அங்க அங்க பிச்சு பிச்சு போட்டு வெச்சேன். :)


ஸ்ரீ on August 18th, 2008 at 12:37 pm

@ Z

//:))//

அப்பாடா ஒரு மூத்த பதிவரை பாத்துட்டேன்யா. ஒருத்தரு சொன்னாரு வெறும் ச்மைலிய பின்னூட்டம் போட்டா அவங்க தான் மூத்த பதிவர்னு.புன்னகை மன்னன் அய்யா நீர்.;)


பிரியமுடன் பிரபு on August 24th, 2008 at 8:59 am

நல்லா இருக்கு
கவிதை எழுதுவதை விட மெட்ட்டுக்கு பாட்டெழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும் நான் தமிழ் பாடலுக்குத்தான் எழுதியுள்ளேன்
http://priyamudan-prabu.blogspot.com/
இங்கே வந்து பார்க்கவும்
பல நாட்களூக்கு பிறகு கன்னட பாடல் கேட்க்க உதவியதற்க்கு ந்நன்றி
அருமையான குரல்


ஸ்ரீ on August 25th, 2008 at 11:14 am

@ பிரியமுடன் பிரபு

//நல்லா இருக்கு
கவிதை எழுதுவதை விட மெட்ட்டுக்கு பாட்டெழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும் நான் தமிழ் பாடலுக்குத்தான் எழுதியுள்ளேன்.இங்கே வந்து பார்க்கவும்//

ஆமாம் பிரபு இப்போதெல்லாம் எனக்கும் அப்படி தான் தோணுது. போங்க பின்னாடியே வந்து பாக்குறேன்.

//பல நாட்களூக்கு பிறகு கன்னட பாடல் கேட்க்க உதவியதற்க்கு ந்நன்றி
அருமையான குரல்//

ஆம் சோனு நிகாம் அட்டகாசமா பாடி இருக்காரு. நான் கேட்ட வெகு சில கன்னட பாடல்களில் இதுவும் ஒன்னு பிரபு. நன்றி கருத்துக்கு.


Vishnu on September 2nd, 2008 at 2:56 pm

//விழியாலே கொலை செய்யும் கொலைகாரி நீ
நான் எதிர்க்காமல் தினம் உந்தன் பலியாகிறேன்
உன்னை விளகாமல் உயிர்வாழும் நிழல் நானடி
நான் இருள் வந்தும் ஒளியாமல் தொடர்வேனடி//

இந்த வரிகள் மிக அருமை …

எனக்கு பிடித்திருந்தது….

வாழ்த்துக்களுடன் …
விஷ்ணு …


ஸ்ரீ on September 8th, 2008 at 6:06 pm

@ Vishnu

//இந்த வரிகள் மிக அருமை …

எனக்கு பிடித்திருந்தது….

வாழ்த்துக்களுடன் …
விஷ்ணு …//

நன்றிங்க விஷ்ணு :)


நாடோடி இலக்கியன் on November 17th, 2008 at 12:38 am

கலக்கிட்ட ஸ்ரீ,
முதன் முறையாய் ஒருமையில் அழைக்கிறேன்.காரணம் உன்னுடைய நட்பை இன்னும் பலமாக்கிக்கொள்ளும் முயற்சி.அந்த அளவவிற்கு உன் பாடல் முயற்சி ரசனையாய் வந்திருக்கிறது.
வாழ்க, வளர்க, கவிப்பணி தொடர்க…!


ஸ்ரீ on November 17th, 2008 at 1:38 pm

@ நாடோடி இலக்கியன்

//கலக்கிட்ட ஸ்ரீ,
முதன் முறையாய் ஒருமையில் அழைக்கிறேன்.காரணம் உன்னுடைய நட்பை இன்னும் பலமாக்கிக்கொள்ளும் முயற்சி.அந்த அளவவிற்கு உன் பாடல் முயற்சி ரசனையாய் வந்திருக்கிறது.
வாழ்க, வளர்க, கவிப்பணி தொடர்க…!//

அண்ணேன் நீங்க எப்படி கூப்டாலும் சரி தான்ணேன். ரொம்ப நன்றி. அருமையான ரசிகர் நீங்களே ரசித்தது குறித்து மகிழ்ச்சி. நிச்சயம் முடிந்தால் எழுதுறேங்க.

Post a comment
         Please fill in the fields marked with *.
*Name: 
*Email:   (Will not be published.)
URL: 
*Comments: