<< A ஃபார் ஆப்பு                   என் நெஞ்சிலே >>
 
Aug
06
    
ஸ்ரீ - Category கவிதை, காதல் in 2008
Add Comments

எதிரொலிக்க மட்டுமே
தெரிந்த மலைகளும்
உன் பெயர் கத்தினால்
உள்வாங்கிக் கொள்கின்றன.

*

சுற்றிப்பறந்த எழுத்துக்களை
சிறை பிடித்து,
பசையொட்டி கோர்வையாக்கி,
கவிதைக்கூண்டில் அடைத்தேன்.

கூண்டை வாசிக்க நீ திறந்ததும்
சுதந்திரம் கிடைத்த ஒவ்வொரு எழுத்தும்
நூறு கவிதைகள் சொல்கின்றது
அலட்டிக்கொள்ளாமல்.

*

அன்னியரிடம்
‘முன்பொரு காலத்தில்…’
என அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.
நான் இப்போது
காதலுக்கும் உனக்குமான விளையாட்டில்
எஞ்சிய சிதைவெச்சம் தானே!

*

மணித்துளி ஒன்றுக்கு
சராசரியாய்
எழுபது விநாடிகள்
கொண்டிருந்த கடிகாரத்துக்கு
நீ நுழைந்த கணத்திலிருந்து
‘இதயம்’ என பெயர் சூட்டிவிட்டேன்.

*

மேல் மாடி குழந்தைக்கு
நீ கொடுத்த பறக்கும் முத்தங்களில்
எனதறையில் தவறி விழுந்த ஒன்றை
என்ன செய்யலாமென சிந்திக்கையில்
பதுங்கியிருந்த இன்னொன்று இறுக்கிப்பிடித்து
“என்ன செய்யட்டும் உன்னை?” என்கிறது.

*

“இதழொப்பத்தின்
கவிதைகளாக்கி
உதட்டுச்சாயமின்றி
உன்
மொழி பெயர்ப்பை
பதிலனுப்புகிறேன்.
கீழுள்ள
கடிதத்தின்”

எப்படியும்
நீ த‌ரும் முத்ததில்
மேலுள்ள கிறுக்கல்
கவிதையாய் விடும்.
சரி செய்வானேன்?

******

இந்த வாரமும் ஒரு சின்ன பாரதி பாட்டு. கோவத்துக்கு பெயர் போனவன் பாரதி ஆதலால் தான் “ரெளத்திரம் பழகு” என்றான். அவன் காதல் பாடல்களின் அழகே தனி. அந்த கோவக்காரனுக்குள் புகுந்த காதல் ஒன்று அவனை படுத்தும் பாட்டை அழகாய் சொல்லி இருப்பான். இசை அதிகமில்லாத‌ இந்த வரிகள் நிச்சயம் அந்த தாக்கத்தை நம்மிலும் பதிக்கும்.

 
icon for podpress  Standard Podcast: Play Now | Play in Popup | Download


பின் குறிப்பு:

மக்கள்ஸ்! நண்பர் தின வாழ்த்துச் செய்தி அனுப்பிய எல்லோருக்கும் நன்றிகள். பெங்களூரிலிருந்து சென்னை பயணத்தில் இருந்ததால் பதிலனுப்ப இயலவில்லை. மன்னிக்கவும்.

காதல் அழிவதில்லை…
-ஸ்ரீ.

Few related Posts

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!




Senthil Kumar on August 6th, 2008 at 11:17 am

me the firstu..


Senthil Kumar on August 6th, 2008 at 11:18 am

கவிதைகள் எல்லாம் நல்லா இருக்குங்க ஸ்ரீ…


Senthil Kumar on August 6th, 2008 at 11:53 am

//எதிரொலிக்க மட்டுமே
தெரிந்த மலைகளும்
உன் பெயர் கத்தினால்
உள்வாங்கிக் கொள்கின்றன.//

இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு ஸ்ரீ…


Senthil Kumar on August 6th, 2008 at 11:55 am

//மேல் மாடி குழந்தைக்கு
நீ கொடுத்த பறக்கும் முத்தங்களில்
எனதறையில் தவறி விழுந்த ஒன்றை
என்ன செய்யலாமென சிந்திக்கையில்
பதுங்கியிருந்த இன்னொன்று இறுக்கிப்பிடித்து
“என்ன செய்யட்டும் உன்னை?” என்கிறது.//

Superuuuuuuuuuu…


Senthil Kumar on August 6th, 2008 at 11:56 am

கடைசியா… தாமதமான நண்பர்கள் தின வாழ்த்துகள் ஸ்ரீ..


ஸ்ரீ on August 6th, 2008 at 3:33 pm

@ Senthil Kumar

// me the firsடு..//

ஹா ஹா இந்த வாரம் நீங்களா? பதிவு போட்டு ரொம்ப நேரம் பின்னூட்ட பெட்டி இயங்காமல் இருந்தது ரொம்ப நேரம் கழித்து தான் கவனித்தேன்.

//கவிதைகள் எல்லாம் நல்லா இருக்குங்க ஸ்ரீ…
Superuuuuuuuuuu…
//

நன்றி செந்தில்.

// இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு ஸ்ரீ…//

ஓ! அப்படியா? இது எழுதி ரொம்ப மாசமாச்சு. சென்னை வந்ததால புதுசா ஒன்னும் எழுத நேரமில்லை அதான் பழசை புடுச்சி போட்டேன். ஒரு வேளை ஜி டாக் மெசேஜா இருந்தப்போ பார்த்திருப்பீங்களா?

//கடைசியா… தாமதமான நண்பர்கள் தின வாழ்த்துகள் ஸ்ரீ..//

உங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே!


aruna on August 6th, 2008 at 8:40 pm

மணித்துளி ஒன்றுக்கு
சராசரியாய்
//எழுபது விநாடிகள்
கொண்டிருந்த கடிகாரத்துக்கு
நீ நுழைந்த கணத்திலிருந்து
‘இதயம்’ என பெயர் சூட்டிவிட்டேன்.//

இது அழகு….
அன்புடன் அருணா


Sathish on August 7th, 2008 at 4:14 am

‘எழுபது நொடி கடிகாரம்’ :) அழகு சிந்தனை ஸ்ரீ!


ஸ்ரீ on August 7th, 2008 at 8:49 am

@ aruna

//இது அழகு….
அன்புடன் அருணா//

ஓ அக்காவுக்கு அந்த கவிதை தான் பிடிச்சிருக்கா ஓக்கே. நன்றிங்கக்கா :D


sri on August 7th, 2008 at 10:04 am

//எதிரொலிக்க மட்டுமே
தெரிந்த மலைகளும்
உன் பெயர் கத்தினால்
உள்வாங்கிக் கொள்கின்றன//
அப்படியா சொல்லவே இல்ல‌..!! ;-))


sri on August 7th, 2008 at 10:11 am

//சுற்றிப்பறந்த எழுத்துக்களை
சிறை பிடித்து,
பசையொட்டி கோர்வையாக்கி,
கவிதைக்கூண்டில் அடைத்தேன்.

கூண்டை வாசிக்க நீ திறந்ததும்
சுதந்திரம் கிடைத்த ஒவ்வொரு எழுத்தும்
நூறு கவிதைகள் சொல்கின்றது
அலட்டிக்கொள்ளாமல்.//
அச்சச்சோ இது ரொம்ப அழகா இருக்கு..!! :-))


sri on August 7th, 2008 at 10:15 am

//அன்னியரிடம்
‘முன்பொரு காலத்தில்…’
என அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.
நான் இப்போது
காதலுக்கும் உனக்குமான விளையாட்டில்
எஞ்சிய சிதைவெச்சம் தானே!//
அண்ணா, சாரி புரியல..!! விளக்கம் ப்ளீஸ்..!! :-(


sri on August 7th, 2008 at 10:16 am

//மணித்துளி ஒன்றுக்கு
சராசரியாய்
எழுபது விநாடிகள்
கொண்டிருந்த கடிகாரத்துக்கு
நீ நுழைந்த கணத்திலிருந்து
‘இதயம்’ என பெயர் சூட்டிவிட்டேன்//
எப்படியெல்லாம் யோசிக்கறீங்க..!! :-)நல்லாருக்கு..!! :-)))


sri on August 7th, 2008 at 10:17 am

//மேல் மாடி குழந்தைக்கு
நீ கொடுத்த பறக்கும் முத்தங்களில்
எனதறையில் தவறி விழுந்த ஒன்றை
என்ன செய்யலாமென சிந்திக்கையில்
பதுங்கியிருந்த இன்னொன்று இறுக்கிப்பிடித்து
“என்ன செய்யட்டும் உன்னை?” என்கிறது.//
இதுக்கு தான் ரொம்ப யோசிக்கக்கூடாதுங்கறது..!! ;-)


sri on August 7th, 2008 at 10:20 am

//“இதழொப்பத்தின்
கவிதைகளாக்கி
உதட்டுச்சாயமின்றி
உன்
மொழி பெயர்ப்பை
பதிலனுப்புகிறேன்.
கீழுள்ள
கடிதத்தின்”

எப்படியும்
நீ த‌ரும் முத்ததில்
மேலுள்ள கிறுக்கல்
கவிதையாய் விடும்.
சரி செய்வானேன்?//
அச்சச்சோ நிஜம்மாவே உங்களுக்கு சென்னை வெயில் ஒத்துக்கலியா?? ;-)


sri on August 7th, 2008 at 10:22 am

//மக்கள்ஸ்! நண்பர் தின வாழ்த்துச் செய்தி அனுப்பிய எல்லோருக்கும் நன்றிகள். பெங்களூரிலிருந்து சென்னை பயணத்தில் இருந்ததால் பதிலனுப்ப இயலவில்லை. மன்னிக்கவும்.//
No மன்னிப்பு..!!


மஹாராஜா.க on August 7th, 2008 at 2:39 pm

எங்க ஸ்ரீ.. எதுக்கு நீங்க பதிவு போட்டுட்டு கமெண்ட்ஸ் மட்டும் ஆப் பண்ணி வச்சு இருந்தீங்க..? நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுனேன் தெரியுமா..? எல்லாம் எதுக்கு..? மீ த பர்ஸ்ட் ..-க்கு தான்.. அடுத்த முறை பதிவு போடும் போது கொஞ்சம் எனக்கு மட்டும் இன்பார்ம் பண்ணுங்க.


மஹாராஜா.க on August 7th, 2008 at 2:42 pm

//எதிரொலிக்க மட்டுமே
தெரிந்த மலைகளும்
உன் பெயர் கத்தினால்
உள்வாங்கிக் கொள்கின்றன.
//

உங்க குரலை கேட்டு அந்த மலை தற்கொலை பண்ணிக்கிட்டு இருக்கும்..
அதான் உங்களுக்கு பதில்..வரல.. அதுக்கு தான் நம்மள போல அழகான வாய்ஸ் உள்ளவங்கள கத்த சொல்லணும்..


மஹாராஜா.க on August 7th, 2008 at 2:45 pm

//சுற்றிப்பறந்த எழுத்துக்களை
சிறை பிடித்து,
பசையொட்டி கோர்வையாக்கி,
கவிதைக்கூண்டில் அடைத்தேன்.

கூண்டை வாசிக்க நீ திறந்ததும்
சுதந்திரம் கிடைத்த ஒவ்வொரு எழுத்தும்
நூறு கவிதைகள் சொல்கின்றது
அலட்டிக்கொள்ளாமல்.
//

Excellent… arumai.. super..bale.


மஹாராஜா.க on August 7th, 2008 at 2:49 pm

//அன்னியரிடம்
‘முன்பொரு காலத்தில்…’
என அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.
நான் இப்போது
காதலுக்கும் உனக்குமான விளையாட்டில்
எஞ்சிய சிதைவெச்சம் தானே!
//

I can’t understand .. Neenga enna Solla vaareeenga..?


M.Saravana Kumar on August 7th, 2008 at 3:49 pm

//மேல் மாடி குழந்தைக்கு
நீ கொடுத்த பறக்கும் முத்தங்களில்
எனதறையில் தவறி விழுந்த ஒன்றை
என்ன செய்யலாமென சிந்திக்கையில்
பதுங்கியிருந்த இன்னொன்று இறுக்கிப்பிடித்து
“என்ன செய்யட்டும் உன்னை?” என்கிறது.//

கலக்கல் தல..


M.Saravana Kumar on August 7th, 2008 at 3:51 pm

//அன்னியரிடம்
‘முன்பொரு காலத்தில்…’
என அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.
நான் இப்போது
காதலுக்கும் உனக்குமான விளையாட்டில்
எஞ்சிய சிதைவெச்சம் தானே!//

இப்பிடி பசங்கள காதல்ங்கற பேர்ல சிதைக்கிறதே இந்த பொண்ணுகதான்..
நல்லவேளை நான் இன்னும் மாட்டிக்கல..


ஸ்ரீ on August 8th, 2008 at 8:26 am

@ Sathish

//‘எழுபது நொடி கடிகாரம்’ அழகு சிந்தனை ஸ்ரீ!//

வாழ்த்துக்கு நன்றி சதீஷ்.


ஸ்ரீ on August 8th, 2008 at 8:39 am

@ sri

//அப்படியா சொல்லவே இல்ல‌..!!//

அதான் இப்போ சொல்லிட்டேனே மா ;)

//அச்சச்சோ இது ரொம்ப அழகா இருக்கு..!! //

நல்லா இருக்கா ஓக்கே. ஆனா அதுக்கெதுக்கு அச்சச்சோ? :D

//அண்ணா, சாரி புரியல..!! விளக்கம் ப்ளீஸ்..!! //

கீழ மஹாராஜாவும் இதே கேள்வியோட இருக்காரு அங்க சேத்து விளக்குறேன் ;)

//எப்படியெல்லாம் யோசிக்கறீங்க..!! நல்லாருக்கு..!! //

எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்.

//இதுக்கு தான் ரொம்ப யோசிக்கக்கூடாதுங்கறது..!!//

மேல யோசிக்க சொல்றீங்க. இங்க வேணாம்னு சொல்றீங்க. என்ன பண்ணட்டும் நான்? யோசிக்கவா வேணாமா?

//அச்சச்சோ நிஜம்மாவே உங்களுக்கு சென்னை வெயில் ஒத்துக்கலியா??//

என்னம்மா செய்ய? சிங் இந்த ரைன் ஐ ஆம் சொயிங் இந்த ரைன் சாங் இந்த ரைன்………

//No மன்னிப்பு..!!//

ஓ உங்களுக்கு டமில்ல புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பா? அப்போ ஐ ஆம் சாரி ஹை :D


ஸ்ரீ on August 8th, 2008 at 8:49 am

@ மஹாராஜா.க

//எங்க ஸ்ரீ.. எதுக்கு நீங்க பதிவு போட்டுட்டு கமெண்ட்ஸ் மட்டும் ஆப் பண்ணி வச்சு இருந்தீங்க..? நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுனேன் தெரியுமா..? எல்லாம் எதுக்கு..? மீ த பர்ஸ்ட் ..-க்கு தான்.. அடுத்த முறை பதிவு போடும் போது கொஞ்சம் எனக்கு மட்டும் இன்பார்ம் பண்ணுங்க.//

சாரி ராஜா. அது எனக்கே தெரியாமல் நடந்த ஒன்னு. நீங்களாவது வேறு பதிவுல பின்னூட்டம் போட்டு சொல்லி இருக்கலாமே! சரி மன்னிச்சிடுங்க. அடுத்த புதன் இந்திய நேரம் சரியா 8:05 க்கு பதிவு போட்டுடுறேன். ;)

//உங்க குரலை கேட்டு அந்த மலை தற்கொலை பண்ணிக்கிட்டு இருக்கும்..
அதான் உங்களுக்கு பதில்..வரல.. அதுக்கு தான் நம்மள போல அழகான வாய்ஸ் உள்ளவங்கள கத்த சொல்லணும்..//

போங் சார் ரொம்ப லொள்ளு பேசுறீங்க நீங்க. மலை தற்கொலை பண்ணிக்க எந்த மலைக்கு போகும்? :P (எப்படி உசாரா பதில் சொன்னேன் பாத்தீங்களா? எந்த பால் போட்டாலும் சிக்ஸ் அடிப்பேனாக்கும் நான். ஆவின் பால் போட்டா டீ அடிப்பேன். எப்படியும் அடுத்த கேள்வி இதான் கேப்பீங்க அதுக்கு முன் கூட்டியே பதில் சொல்லிட்டேன். அட்வான்ஸ் பிரெயின்)

//Excellent… arumai.. super..bale.//

நன்றி… சுக்ரியா… தேங்க்யூ… தன்யவாத்.

//I can’t understand .. Neenga enna Solla vaareeenga..?//

அவன் இரண்டு குழந்தைகளுக்கு இடையில் மாட்டி சிதைவுண்ட பொம்மை போல இருக்கிறானாம் இப்போது. அந்த குழந்தைகள் தான் காதலும் காதலியும். அதனால் அவன் இப்போது யாரிடமாவது தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது ஒரு காலத்தில் இப்படி இருந்தவன்னு சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்கிறானாம். விளக்கம் ஓவர். சோடா குடுங்கப்பா யாராச்சும்.

ஆனா சரவணகுமார் செல்லத்தை பாருங்க சார்ப்பா பாயிண்ட்ட புடிச்சி இருக்காரு.


ஸ்ரீ on August 8th, 2008 at 8:52 am

@ M.Saravana Kumar

//கலக்கல் தல..//

நன்றிங்க சரவணா.

//இப்பிடி பசங்கள காதல்ங்கற பேர்ல சிதைக்கிறதே இந்த பொண்ணுகதான்..//

அப்படி எல்லாம் சொல்லிட முடியாது சரவணா. நான் எப்பவுமே சொல்றா மாதிரி தவறு என்றைக்குமே ஒரே பக்கம் இருக்காது.

//நல்லவேளை நான் இன்னும் மாட்டிக்கல..//

ஹா ஹா ஹா. எங்க அப்பன் குதுருக்குள்ள இல்ல எங்க அப்பன் குதுருக்குள்ள இல்ல சொன்னா நம்புங்க எங்க அப்பன் குதுருக்குள்ள இல்ல :P


sri on August 8th, 2008 at 9:32 am

//நல்லா இருக்கா ஓக்கே. ஆனா அதுக்கெதுக்கு அச்சச்சோ?//

அது சும்மா லுலுலுக்கு…!! ;-)

//என்ன பண்ணட்டும் நான்? யோசிக்கவா வேணாமா?//

யோசிங்க ஆனா யோசிச்சுக்கிட்டேஏஏஏஏ இருக்காதீங்க. புரியுதா?? :-D

//ஓ உங்களுக்கு டமில்ல புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பா? அப்போ ஐ ஆம் சாரி ஹை//
தமிழ்ல மட்டும் இல்ல வேற எந்த மொழியிலயும் பிடிக்காத வார்த்தை… நீங்க கேட்கும் போது மட்டும்..!! :-)


செந்தழல் ரவி on August 8th, 2008 at 12:08 pm

எக்ஸலண்ட்


ஸ்ரீ on August 8th, 2008 at 6:31 pm

@ sri

//அது சும்மா லுலுலுக்கு…!!

யோசிங்க ஆனா யோசிச்சுக்கிட்டேஏஏஏஏ இருக்காதீங்க. புரியுதா?? //

என் கிட்ட சொல்றீங்களா? நான் யோசிக்கலாமானே யோசிக்கிற ஆளு.

//தமிழ்ல மட்டும் இல்ல வேற எந்த மொழியிலயும் பிடிக்காத வார்த்தை… நீங்க கேட்கும் போது மட்டும்..!! //

அது சரி. பொய் சொன்னா எனக்கு பிடிக்கும் ஆனா சொல்றது நானா இருக்கணும்னு சொல்லுவீங்க போல நீங்க :D


சென்ஷி on August 8th, 2008 at 10:14 pm

கவிதைகள் அத்தனையும் அழகு.. மனதை கொள்ளை கொண்டுவிட்டன உங்களின் வார்த்தைகள்…


பிரியமுடன் பிரபு on August 9th, 2008 at 3:54 am

மேல் மாடி குழந்தைக்கு
நீ கொடுத்த பறக்கும் முத்தங்களில்
எனதறையில் தவறி விழுந்த ஒன்றை
என்ன செய்யலாமென சிந்திக்கையில்
பதுங்கியிருந்த இன்னொன்று இறுக்கிப்பிடித்து
“என்ன செய்யட்டும் உன்னை?” என்கிறது.
/////////////
கடைசியா என்ன ஆச்சு
எல்லா கவிதையும் அருமை
காதல் பைத்தியாமா நீங்கள்????
சீக்கிரமா
நல்ல டாக்டரா பாருங்க


திவ்யா on August 9th, 2008 at 5:00 am

\\மேல் மாடி குழந்தைக்கு
நீ கொடுத்த பறக்கும் முத்தங்களில்
எனதறையில் தவறி விழுந்த ஒன்றை
என்ன செய்யலாமென சிந்திக்கையில்
பதுங்கியிருந்த இன்னொன்று இறுக்கிப்பிடித்து
“என்ன செய்யட்டும் உன்னை?” என்கிறது.\

So cute:))

கவிதைகள் அனைத்தும் சூப்பர் ஸ்ரீ!!


கோபிநாத் on August 10th, 2008 at 4:24 pm

மாப்பி வழக்கம் போல கவிதைகள் எளிமை…சூப்பர் ;)

பாடலுக்கு மிக்க நன்றி மாப்பி….


ஸ்ரீ on August 11th, 2008 at 8:33 am

@ செந்தழல் ரவி

//எக்ஸலண்ட்//

நன்றி ரவி அண்ணேன்.


ஸ்ரீ on August 11th, 2008 at 8:37 am

@ சென்ஷி

//கவிதைகள் அத்தனையும் அழகு.. மனதை கொள்ளை கொண்டுவிட்டன உங்களின் வார்த்தைகள்…//

ஹா ஹா ஒரு பின்நவனீத்துவ வாதி மனசு கிடைச்சா சூப்பரு தான். நன்றி தல.


ஸ்ரீ on August 11th, 2008 at 8:40 am

@ prabu

//கடைசியா என்ன ஆச்சு
எல்லா கவிதையும் அருமை
காதல் பைத்தியாமா நீங்கள்????
சீக்கிரமா
நல்ல டாக்டரா பாருங்க//

ஹா ஹா அது எல்லாம் ரகசியம் பிரபு அதெல்லாம் சொல்லப்டாது. காதல் பைத்தியமா? ஐ நல்லா இருக்கே பேரு காதல் பைத்தியம். அதெல்லாம் எதுக்கு பிரபு பைத்தியமா இருக்கறது ரொம்ப சந்தோஷமான விஷயம் தான் இப்போ இருக்குற உலகத்துல :)


ஸ்ரீ on August 11th, 2008 at 9:13 am

@ திவ்யா

//So cute

கவிதைகள் அனைத்தும் சூப்பர் ஸ்ரீ!!//

அப்பாடா நன்றி திவ்யா நிறைய பேர் அந்த கவிதை நல்லா இருக்கறதா சொன்னாங்க. முதலில் நான் இதை எழுதி காண்பித்த போது இது கவிதையான்னு கேட்டாங்க :(


ஸ்ரீ on August 11th, 2008 at 9:15 am

@ கோபிநாத்

//மாப்பி வழக்கம் போல கவிதைகள் எளிமை…சூப்பர் //

நன்றி மாப்பி.

//பாடலுக்கு மிக்க நன்றி மாப்பி….//

பாட்டு கேட்ட ஒரு ஜீவனாவது இருக்குதே! டேங்க்கூ மாப்பி. என்னடா இது வெட்டியா பாட்டு போடுறோமா? பேசாம நிறுத்திடலாம்னு இருந்தேன். நீங்க கேக்குறீங்கனா வரும் வாரத்துக்கு ஏதாவது நல்ல பாரதி பாட்டு தேடுறேன்.


பிரியமுடன் பிரபு on August 11th, 2008 at 12:20 pm

எப்படியோ நல்லா இருந்தா சரி


aruna on August 12th, 2008 at 6:37 pm

என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது…. சென்று பார்க்கவும்…
(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)
அன்புடன் அருணா


ஸ்ரீ on August 18th, 2008 at 12:39 pm

@ prabu

//எப்படியோ நல்லா இருந்தா சரி//

ஹி ஹி ஹி.

@ aruna

//என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது…. சென்று பார்க்கவும்…
(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)
அன்புடன் அருணா//

முன்னாடி போய்கிட்டே இருங்கக்கா பின்னாடியே குடு குடுனு ஓடியாறேன் நான். :)


goma on August 24th, 2008 at 9:59 pm

எதிரொலிக்க மட்டுமே
தெரிந்த மலைகளும்
உன் பெயர் கத்தினால்
உள்வாங்கிக் கொள்கின்றன.//காரணம்,
அந்த மலைகளும் அவளை காதலிக்கின்றனவோ


goma on August 24th, 2008 at 10:04 pm

அல்லது
இன்னொருவர்
உன் காதலி பெயரை, சொல்வதை
நீ விரும்பாதிருப்பவன் என்று
அந்த மலைகள் கூட உணர்ந்திருக்குமோ


goma on August 24th, 2008 at 10:16 pm

அதுவரை
லப் டப் லப் டப்
என்று துடித்த இதயம்
நீ நுழைந்த பின்
லவ் ஹர் ,லவ் ஹர்
என்று அடிக்கிறதே.


ஸ்ரீ on August 25th, 2008 at 9:16 am

@ goma

//காரணம்,
அந்த மலைகளும் அவளை காதலிக்கின்றனவோ
அல்லது
இன்னொருவர்
உன் காதலி பெயரை, சொல்வதை
நீ விரும்பாதிருப்பவன் என்று
அந்த மலைகள் கூட உணர்ந்திருக்குமோ//

நீங்க என்ன நினைக்கிறீங்க கோமதி? :)

//அதுவரை
லப் டப் லப் டப்
என்று துடித்த இதயம்
நீ நுழைந்த பின்
லவ் ஹர் ,லவ் ஹர்
என்று அடிக்கிறதே.//

அடடடடா பின்றீங்களே! அப்படி கூட அடிக்குமா என்ன?


risath on August 28th, 2008 at 3:28 pm

கவிதைகள் அனைத்தும் சூப்பர் ஸ்ரீ


gayathri on August 29th, 2008 at 5:53 pm

hai sri kavithaigal ellam supper pa. ellarium nalla kalaikerenga


ஸ்ரீ on September 1st, 2008 at 2:54 pm

@ risath

//கவிதைகள் அனைத்தும் சூப்பர் ஸ்ரீ//

ரொம்ப நன்றிங்க ரிசாத். முதல் வருகைன்னு நினைக்குறேன் :)


ஸ்ரீ on September 1st, 2008 at 4:03 pm

@ gayathri

//hai sri kavithaigal ellam supper pa. ellarium nalla kalaikerenga//

டேங்க்ஸ் காயத்ரி. என்னது கலாய்க்கிறேனா? மேல இருக்குறது எல்லாம் கவிதைங்க நீங்க காமெடின்னு நெனச்சிட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ் :((

Post a comment
         Please fill in the fields marked with *.
*Name: 
*Email:   (Will not be published.)
URL: 
*Comments: