மறுபடியும் தொடர் பதிவு போட கூப்பிட்டாச்சு. கொசுவத்தின்னா சுலபமா சுத்திடலாம். இது ஏ,பி,சி,டியாம். அதை மறக்கற நேரத்துல இப்படி ஒரு பதிவு போட சொல்லிட்டாங்க Sri. போட்டுடலாம்ன்னு தொலைபேசியில சொல்லிட்டு வெச்சிட்டேன். எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை தான்.
கீ போடுல இதையாவது சரியான வரிசையில வெச்சா என்னவாம்? இப்படி கலைச்சி கலைச்சி போட்டா எப்படி தான் ஒரு சின்ன புள்ள சரியான வரிசையை கண்டு பிடிப்பேன்? லோகத்துல யாருக்கும் பொறுப்பில்லை யாருக்கும் அக்கரை இல்லை. எதையும் ஒழுங்கா ஆடர்லையே வைக்க மாட்டேங்குறா. என்னமோ போங்க. என்ன கூப்பிட்டதுக்கு ஒரு பதிவு போட்டு ஓடி போயிடுறேன்.
A - www.apple.com - விண்டோஸை விட்டா வேற என்ன இருக்குன்னு கேக்குறவங்க போய் பாக்க வேண்டிய தளம். Mac மடிகணினிகள் பற்றி தெரிந்துகொள்ள போவது தான்.
B - www.btjunkie.org - டோரெண்ட் (Torrent) தேட ஒரு அருமையான தளம். தேடுவது முக்கால்வாசி கிடைத்து விடும்.
www.blip.tv - யூ டியூப் மாதிரி தான் இந்த தளமும்.
C - www.cricinfo.com - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெறியன். அந்த அணி விளையாடும் ஆட்டங்களில் 1 நிமிடத்துக்கு ஒரு முறை பக்கங்களை புதுக்கிளர்ச்சியூட்டுவேன் (Refresh).
D - www.digg.com - “சோஷியல் புக் மார்க்கிங்” தளம். பெரிய கடல் டிக்கி டிக்கி போனா போய்கிட்டே இருக்கும். டிக்குங்க டிக்குங்க
E - www.easyshare.com - நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ள ஒரு இடம்.
www.esnips.com - இதில் சேர்ந்தால் நமக்கு கொஞ்சம் இடம் ஒதுக்கித் தருவார்கள் அதுல என்ன குப்பை வேணும்னாலும் தள ஏற்றம் பண்ணிக்கலாம். வலைப்பூவில் பாடல்கள் இணைக்க அழகான MP3 பிளேயர்கள் கிடைக்கும்.
F - www.facebook.com - ஆர்குட் மாதிரி தான் இதுவும். இதுக்கு மேல என்ன சொல்ல?
G - www.google.com - பொட்டி தட்டியா இருந்து வேற எங்க போக போறேன். கூகுள் தான் இன்னும் நான் உசுருக்கு சேதாரம் இல்லாம ஆபீஸ்ல இருக்க உதவுது.
H - www.history.com - வரலாறு முக்கியம் அமைச்சரே! அதனால் தான் கொஞ்சம் எட்டிப்பாத்து ஏதாவது தெரிஞ்சுக்குவேன். பாத்தீங்களா? இது கூட உருப்படாத காரியம் தான். ஏன்னா நடை முறை வாழ்க்கைக்கு உதவுறது இல்லை. நிகழ்கால நிகழ்ச்சிகள் தெரிந்து கொள்வதில்லை. ஒருவேளை 20 வருசம் கழிச்சு இன்னிக்கு நடந்ததை தெரிஞ்சிக்குவேன் போல. தம்மாதூண்டு தான சுலோவா இருக்கேன். பரவாயில்லை….
I - www.imdb.com - நாளிதழில் பார்க்கும் ஒரே பக்கம் தொலைக்காட்டிகளில் நிகழ்ச்சி நிரல். இரவு படங்களை குறித்துக்கொண்டு நேரா இடத்துக்கு வந்து இந்த தளத்தில் அந்த படத்துக்கு தந்திருக்கும் மதிப்பெண்ணையும் விமர்சனத்தையும் படித்துவிடுவேன்.
J - www.jaiku.com - டிவீட்டர் (Twitter) சில இடங்களில் தடை செய்திருந்தால் இதை உபயோகிக்கலாம்.
K - http://kaadhal.info - இது இன்னும் இயக்கத்துக்கு வரவில்லை. அடுத்த அடி இது தான். நிறைய காதலர்கள் தேவபடுறாங்க. டொமைன் வாங்கி சும்மாவே வெச்சிருக்கேன். உங்கள் எண்ணங்களை சொன்னா அதை உயிர்பிக்கலாம். கூடிய விரைவில் ஒரு துவக்கத்துக்கு வரணும்னு ஆசைப்படுறேன்.
L - www.lifeofexcellence.com - நண்பன் நிவாஸ் தனி ஆளாக உருவாக்கிய தளம். இப்போது தினமும் சராசரியாக 6000 பார்வையாளர் கொண்டுள்ள ஒரு தளம். நிறைய உருப்படியான விஷயங்கள் இருக்கு அதுல. ஆனா பாத்துட்டா எங்க உருப்பட்டுட போறேனோங்குற பயத்தாலயே அடிக்கடி போகறது இல்லை.
www.last.fm - யூ டியூப் வீடியோன்னா இது ஆடியோ. போய் பாருங்க.
M - www.mentoshelpline.com - இங்கு அடிக்கடி போவதில்லை. ஒரே ஒரு முறை பார்த்தேன். ஆனால் முழுமையாக பார்க்கவில்லை. பல நகைச்சுவையான பகுதிகள் இருந்தன.
www.mixx.com - இதுவும் ஒரு புக் மார்க்கிங் தளம்.
www.morningstar.com - பங்குச்சந்தை பத்தி தெரிஞ்சிக்க இது உதவும்.
N - www.nick.com - என்னிய மாதிரி கீற குட்டி பயலுவோளுக்கு சோக்கா டைம் பாஸ் ஆகும். கொய்ந்தைங்க வெளாட்டு நிறைய இருக்கு.
O - http://onlysuccess.net - இதிலும் நிவாஸ் பங்கிருக்கு. நல்ல விஷயங்கள் நிறைய இருக்குற ஒன்னு. Personality Development குறித்து ஒரு தளம். Neurolinguistic Programme நடத்துறாங்க. அது என்னன்னு தெரியனும்னா இங்க போய் பாருங்க. http://en.wikipedia.org/wiki/Neuro-linguistic_programming
P - www.plurk.com மற்றும் www.pownce.com - ரெண்டுமே Twitter பதிலா உபயோகிக்கலாம்.
Q - www.quantcast.com - ஊடுக்கு எத்தனை பேரு வந்தாங்கன்னு பாக்கலாம் இதுல.
R - www.raaja.com - சாப்பாடு, தண்ணி, தூக்கம் இது மூணும் இளையராஜாவுக்கு அப்புறம் தான். தினம் காலையில் செல்பேசி அலார்மில் பாடி எழுப்புவார். சந்தோஷமா எழுந்துப்பேன் ஆனா மணி என்னமோ 9.30 ஆயிடும். உலகத்துல 9.30 மணிக்கு அலார்ம் வெச்சு எழுந்துக்கிற ஒரே ஜீவன் நானா தான் இருப்பேன்.
S - www.scour.com - தேடு தளம் தான் இதுவும். போய் பாருங்க.
T - www.takagism.net - ஒரு சுவாரசியமான தளம். நிறைய மூளைக்கு வேளை தர விளையாட்டெல்லாம் இருக்கும். ஒரு அறையில் கிடைக்கும் துப்புகளை வைத்து தப்பிப்பது போல நிறைய விளையாட்டுகள் இருக்கும். வெட்டியா இருக்குற நேரத்துல உருப்படியா ஏதாவது பண்ணனும்னா இங்க போகலாம்.
U - www.ustream.tv - வீடியோக்கள் பார்க்கலாம். பொழுது போக்கு தான்.
V - www.viddler.com - இதும் வீடியோ பகிர்ந்துகொள்ளும் ஒரு தளம்.
W - www.wackivideo.com - யூ டியூப் மாதிரி இன்னொன்னு.
X - www.xoxomovie.com - படம் பாக்கலாமுங்கோ இங்க.
Y - www.youku.com - நிறைய ஆங்கிலப்படம் பார்க்கும் பழக்கம் உள்ளவன். ஏதாவது புது படத்தை வார இறுதியில் அலுவலகம் வந்து இதில் பார்ப்பது வழக்கம். இது ஒரு சைனீஸ் சைட் ஆதலால் படங்கள் தேடுவது கொஞ்சம் சிரமமான விஷயம். ஒன்றரை மணி நேரம் படத்தை தேடவே ஒரு மணி நேரம் ஆகிடும் எனக்கு.
Z - www.zapak.com எப்பவாவது கேம் விளையாடுவேன் அவ்ளோ தான். மத்தபடி அதிகமா போறது இல்லை.
அதிகமா வலையில் அமர மாட்டேன். அதனால் நிவாஸ் அடிக்கடி போகும் தளங்களை சொல்கிறேன். இதில் சில Web 2.0 டெக்னாலஜி சைட்டுகள். அவன் பக்கத்தில் உட்கார்ந்து செய்வதை பட்டிக்காட்டான் முட்டாய்கடையை பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கு புரியவில்லையென்றலும் உங்களில் சிலருக்கும் உதவலாம் என்ற எண்ணத்தில் சிலவற்றை மேலே சொல்லி இருக்கிறேன். இதுல இருந்தே என்ன பத்தி தெரிஞ்சிருக்கும். வெட்டியா ஏதாவது படம் பாக்க மட்டும் தான் வலை எனக்கு. இனிமேலாவது உருப்படியா ஏதாவது பண்ணனும்.
நான் ஆப்பு வைக்கும் மூணு பேர்.
1. ரீகன்.
2. மகாராஜா.
3. நாடோடி இலக்கியன்.
Rules:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People.
பின் குறிப்பு:
மக்களே சென்னைக்கு இடமாற்றம் பண்ணிட்டாங்க. இது தான் நான் பெங்களூர்ல இருந்து போடுற கடைசி பதிவு. வெயில் ஊருல இருந்து பதிவு போட்டா சூடான இடுகையில வருமோ?
புது இடம் எப்படி இருக்கும் என தெரியவில்லை. அதான் அலுவலகத்தில் எனக்கு வைத்த ஆப்பை நினைவு படுத்தும் வகையில் இந்த பதிவுக்கு த்லைப்பிட்டேன். வரும் புதன்கிழமை பதிவு சந்தேகம் தான். சந்தோசமா இருங்க ஒரு வாரமாவது.
ஆப்புகள் ஆரம்பமாகட்டும்…
-ஸ்ரீ.
Few related Posts
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
