<< குசேலனின் இதைத் தவிர்க்கவும்                   நாக்கறுந்த மணி >>
 
Jul
09
    
ஸ்ரீ - Category கவிதை, காதல் in 2008
Add Comments



மேல் தாளில் தூவலின்* அழுத்தம்
எழுதாத அடுத்தப் பக்கத்தில்
விட்டுச்செல்லும் தடமாய்
அவ்வப்போது காயப்படுகிறது இதயம்.
சக காதலர்களைக் கடக்கையில்…



#

சுவாரசியமான மர்ம நாவல்
வாசிப்பனாய்த் தான்
உன்னைக் கண்கொட்டாமல் பார்க்கிறேன்.
மற்றபடி நீ பார்க்கும் நாழிகை
முகம் திருப்பிக்கொள்வது எல்லாம்
வெறும் பக்கங்கள் புரட்டும் அவகாசமே.



#

உன் புத்தகத்தில்
வாக்கியமாகும் ஆசை இல்லை.
அதன் இறுக்கத்தில்
தவணை முறையில்
சருகாகும் இலையாகவாவது
இருந்துவிட்டுப் போகிறேன்.
அனுமதிப்பாயா?



#

அழகுக்கு அகராதிகள்
ஏராளம் உண்டு.
இருப்பினும்,
நீ மட்டுமே
‘அழகான அகராதி’.



#

பதிவேடு* நீயும்,
குறிப்புப் புத்தகம்* நானும்,
எப்படியோ ஒன்றானோம்
காதல் எனும் புத்தகமூட்டையில்.



#

கரிக்கோலாய்* மேனி தீண்டவா?
இல்லை
அழிப்பானாய் தேகம் உரசவா?
நீ புத்தகமானால்
எதுவும் சம்மதமே!



#

இரண்டு பக்கங்களின் அரவணைப்பில்
சுகமாய்த் துயிலும் அடையாளச்சீட்டாய்*,
எப்போதும்
என் இதயத்தினுள்ளே நீ!



#

*தூவல் = Pen,
*பதிவேடு = Record Note,
*குறிப்புப் புத்தகம் = Rough Note,
*கரிக்கோல் = Pencil,
*அடையாளச்சீட்டு = Bookmark.

காதல் அழிவதில்லை…
-ஸ்ரீ.

Few related Posts

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!




sri on July 9th, 2008 at 11:08 am

me the first??


sri on July 9th, 2008 at 11:13 am

எதாவது தமிழ் அகராதி படிச்ச தாக்கத்துல எழுதினீங்களா அண்ணா..??
;-)
தூவல்,பேனா,பதிவேடு,குறிப்புப் புத்தகம்,கரிக்கோல்,அடையாளச்சீட்டு-னு ஒரே தூய தமிழா இருக்கு..!! :-)


sri on July 9th, 2008 at 11:17 am

முதல் கவிதையின் சோகம் (ஆதங்கம்??) அழகா இருக்கு..!!


sri on July 9th, 2008 at 11:19 am

//சுவாரசியமான மர்ம நாவல்
வாசிப்பனாய்த் தான்
உன்னைக் கண்கொட்டாமல் பார்க்கிறேன்.
மற்றபடி நீ பார்க்கும் நாழிகை
முகம் திருப்பிக்கொள்வது எல்லாம்
வெறும் பக்கங்கள் புரட்டும் அவகாசமே.//
ரசனையான ரசிப்பு..!! :-)


sri on July 9th, 2008 at 11:20 am

//பதிவேடு* நீயும்,
குறிப்புப் புத்தகம்* நானும்,
எப்படியோ ஒன்றானோம்
காதல் எனும் புத்தகமூட்டையில்.//
பள்ளிக்காதல்(?!) அழகு..!! :-)


sri on July 9th, 2008 at 11:25 am

//கரிக்கோலாய்* மேனி தீண்டவா?
இல்லை
அழிப்பானாய் தேகம் உரசவா?
நீ புத்தகமானால்
எதுவும் சம்மதமே!
#
இரண்டு பக்கங்களின் அரவணைப்பில்
சுகமாய்த் துயிலும் அடையாளச்சீட்டாய்*,
எப்போதும்
என் இதயத்தினுள்ளே நீ!//

இந்த வார கவிதையின் ஹீரோ எலிமெண்டிரி ஸ்கூல்ல படிக்கறவரா??
;-) ஒரே பென்சில், ரப்பர்-னு இருக்கேனு கேட்டேன்..!! :-D


sri on July 9th, 2008 at 11:27 am

மொத்தத்தில் எல்லா கவிதையும் ஒரு எக்ஸ்ட்ரா அழகோட இருக்கு தூய தமிழால்..!! :-)


Rasikow Gnaniyar on July 9th, 2008 at 11:58 am

//சுவாரசியமான மர்ம நாவல்
வாசிப்பனாய்த் தான்
உன்னைக் கண்கொட்டாமல் பார்க்கிறேன்.
மற்றபடி நீ பார்க்கும் நாழிகை
முகம் திருப்பிக்கொள்வது எல்லாம்
வெறும் பக்கங்கள் புரட்டும் அவகாசமே.//

அருமையாக இருக்கின்றது …..

உண்மையில் அழகான அகராதிதான்


Senthil Kumar on July 9th, 2008 at 12:12 pm

எல்லா கவிதையும் அருமையா இருக்குங்க ஸ்ரீ…


Senthil Kumar on July 9th, 2008 at 12:13 pm

//அழகுக்கு அகராதிகள்
ஏராளம் உண்டு.
இருப்பினும்,
நீ மட்டுமே
‘அழகான அகராதி’.//

எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு..


Senthil Kumar on July 9th, 2008 at 12:15 pm

//கரிக்கோலாய்* மேனி தீண்டவா?
இல்லை
அழிப்பானாய் தேகம் உரசவா?
நீ புத்தகமானால்
எதுவும் சம்மதமே!//

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க Boss..
Superuuuuu..

Ponnu enna LKG Padikkirangala…


Senthil Kumar on July 9th, 2008 at 12:18 pm

*தூவல் = பேனா,//

முதன்முறையாக கேள்விப்படறேன்…

அருமையான தமிழ் வார்த்தைகள்…


J J Reegan on July 9th, 2008 at 12:19 pm

// உன் புத்தகத்தில்
வாக்கியமாகும் ஆசை இல்லை.
அதன் இறுக்கத்தில்
தவணை முறையில்
சருகாகும் இலையாகவாவது
இருந்துவிட்டுப் போகிறேன்.
அனுமதிப்பாயா? //

// இரண்டு பக்கங்களின் அரவணைப்பில்
சுகமாய்த் துயிலும் அடையாளச்சீட்டாய்*,
எப்போதும்
என் இதயத்தினுள்ளே நீ! //

// *தூவல் = பேனா,
*பதிவேடு = ரெகார்ட் னோடே,
*குறிப்புப் புத்தகம் = ரஃப் னோடே,
*கரிக்கோல் = பெந்ஸில்,
*அடையாளச்சீட்டு = புக்‌மார்க்.
//

கவிதையை விட பின்குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு…


செந்தழல் ரவி on July 9th, 2008 at 2:44 pm

இவ்வளவு சொல்லும் நீங்கள் எதுக்கு வடமொழி எழுத்தை உங்கள் பெயராக வைத்துள்ளீர்கள் ?

அல்லது ஸ்ரீ என்பது தமிழ் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா ?


ஸ்ரீ on July 9th, 2008 at 2:52 pm

@ செந்தழல் ரவி

//இவ்வளவு சொல்லும் நீங்கள் எதுக்கு வடமொழி எழுத்தை உங்கள் பெயராக வைத்துள்ளீர்கள் ?//

நல்ல ஒரு சந்தேகம் தான். நான் தூய தமிழில் தான் எழுத வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லையே சகோதரரே! அந்த வார்த்தைகள் கவிதைக்கு அழகா இருக்கும் என்பதனால் சேர்த்தவை. “பென்சிலாய் மேனி தீண்டவா?” என்பது நெருடலாக இருக்கும் என உணர்ந்தேன். அவ்வளவு தான்.

//அல்லடு ஸ்ரீ என்பது தமிழ் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா ?//

அப்படி நினைக்கவில்லை தோழா. அதற்காக இயற்பெயரை மாற்றிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. வருகைக்கும் கேள்விகளுக்கும் நன்றி :)


naanal on July 9th, 2008 at 3:24 pm

அனைத்து கவிதைகளும் அருமை.
பின் குறிப்பு இன்னும் அருமை, புதுசா நாலு வார்த்தை தமிழ்ல கத்துக்கிட்டேன்… நன்றி. :)


மஹாராஜா.க on July 9th, 2008 at 4:02 pm

அப்பாடா. இந்த முறைதான் கவிதை எல்லாம் நல்லா புரிஞ்சி இருக்கு…….
எல்லா கவிஜையும் ரொம்ப சூப்பர் ராக இருக்குங்க ஸ்ரீ..
மிகவும் ஆழமான வரிகள் மற்றும் அழுத்தமான வரிகள்..
தொடரட்டும் உங்கள் கவிஜை பனி..(மன்னிக்கவும்) பணி….


மஹாராஜா.க on July 9th, 2008 at 4:05 pm

//சுவாரசியமான மர்ம நாவல்
வாசிப்பனாய்த் தான்
உன்னைக் கண்கொட்டாமல் பார்க்கிறேன்.
மற்றபடி நீ பார்க்கும் நாழிகை
முகம் திருப்பிக்கொள்வது எல்லாம்
வெறும் பக்கங்கள் புரட்டும் அவகாசமே.

//

இந்த கவிதை ரொம்ப இயற்கையாகவும் அழகாகவும் இருக்கிறது..
இது தான் டாப் கவிதை…இன்னைக்கு..


மஹாராஜா.க on July 9th, 2008 at 4:11 pm

//கரிக்கோலாய்* மேனி தீண்டவா?
இல்லை
அழிப்பானாய் தேகம் உரசவா?
நீ புத்தகமானால்
எதுவும் சம்மதமே!

//

அப்பறம் வாத்தியார் பெரம்பு எடுத்துட்டு வந்து உங்க மேனியை தீண்டுவார்
பரவா இல்லையா..?


மஹாராஜா.க on July 9th, 2008 at 4:12 pm

ஆமாம்.. ஒன்னு மட்டும் எனக்கு புரியல… எதுக்கு சில கவிதை-க்கு உள்ள
நிறைய ஸ்டார் இருக்கு.. அந்த கவிதை எல்லாம் நாட் அவுட் கவிதையா..?


aruna on July 9th, 2008 at 5:52 pm

தூவல் = Pen,
*பதிவேடு = Record Note,
*குறிப்புப் புத்தகம் = Rough Note,
*கரிக்கோல் = Pencil,
*அடையாளச்சீட்டு = Bookmark.

Thanx for the vocabulary support.continue this support…I’ll send the tuition fee
Anbudan aruna


கோபிநாத் on July 9th, 2008 at 7:16 pm

\\*தூவல் = Pen,
*பதிவேடு = Record Note,
*குறிப்புப் புத்தகம் = Rough Note,
*கரிக்கோல் = Pencil,
*அடையாளச்சீட்டு = Bookmark\\

சூப்பரு…அருமை…புதுமை…கலக்கிட்ட்டிங்க ;))


ஸ்ரீ on July 10th, 2008 at 1:55 pm

@ sri

//me the first??

எதாவது தமிழ் அகராதி படிச்ச தாக்கத்துல எழுதினீங்களா அண்ணா..??
தூவல்,பேனா,பதிவேடு,குறிப்புப் புத்தகம்,கரிக்கோல்,அடையாளச்சீட்டு-னு ஒரே தூய தமிழா இருக்கு..!! //

இல்லம்மா. நானும் சக பதிவகளிடம் உதவி வாங்கி தான் சில வார்த்தைகளை தெரிஞ்சிக்கிட்டேன்.

//முதல் கவிதையின் சோகம் (ஆதங்கம்??) அழகா இருக்கு..!!

ரசனையான ரசிப்பு..!!

பள்ளிக்காதல்(?!) அழகு..!!

இந்த வார கவிதையின் ஹீரோ எலிமெண்டிரி ஸ்கூல்ல படிக்கறவரா??
ஒரே பென்சில், ரப்பர்-னு இருக்கேனு கேட்டேன்..!! //

எலிமெண்டரி ஸ்கூலா? அங்கயே காதலை ஆரம்பிச்சிடுறாங்களா? பசங்க பாஸ்ட்டாத்தான் போறாங்க :)

//மொத்தத்தில் எல்லா கவிதையும் ஒரு எக்ஸ்ட்ரா அழகோட இருக்கு தூய தமிழால்..!! //

நன்றி ஹை Sri.


ஸ்ரீ on July 10th, 2008 at 1:57 pm

@ Rasikow Gnaniyar

//அருமையாக இருக்கின்றது …..

உண்மையில் அழகான அகராதிதான்//

நன்றிங்க Rasikow Gnaniyar. உங்க காதலிசம் வாசிப்பவன் தான் நானும்.


ஸ்ரீ on July 10th, 2008 at 2:01 pm

@ Senthil Kumar

//எல்லா கவிதையும் அருமையா இருக்குங்க ஸ்ரீ…//

நன்றி செந்தில்.

//எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு..
எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க Boss..
Superuuuuu..

Ponnu enna LKG Padikkirangala…//

நீங்களும் இதே கேள்வியா?

//முதன்முறையாக கேள்விப்படறேன்…

அருமையான தமிழ் வார்த்தைகள்…//

இப்படி நிறைய அழகான வார்த்தைகளை நாம் உபயோகிக்காமல் இருக்கிறோம். முடிந்தால் சிலவற்றை உபயோகித்து சில கவுஜைகளை எழுதுறேன்.


ஸ்ரீ on July 10th, 2008 at 2:04 pm

@ J J Reegan

//கவிதையை விட பின்குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு…//

ஹா ஹா. ரீகன் அப்போ இனிமே வெறும் பின்குறிப்பு மட்டும் போட்டுடலாம் எல்லா வாரமும்.

நீங்க சொல்ல வந்தது புரியுது தல. எல்லா வார்த்தையையும் ஆங்கிலத்தில மாத்திட்டேன் ;)


ஸ்ரீ on July 10th, 2008 at 2:08 pm

@ naanal

//அனைத்து கவிதைகளும் அருமை.
பின் குறிப்பு இன்னும் அருமை, புதுசா நாலு வார்த்தை தமிழ்ல கத்துக்கிட்டேன்… நன்றி. //

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாணல்.


ஸ்ரீ on July 10th, 2008 at 2:12 pm

@ மஹாராஜா.க

//அப்பாடா. இந்த முறைதான் கவிதை எல்லாம் நல்லா புரிஞ்சி இருக்கு…….
எல்லா கவிஜையும் ரொம்ப சூப்பர் ராக இருக்குங்க ஸ்ரீ..
மிகவும் ஆழமான வரிகள் மற்றும் அழுத்தமான வரிகள்..
தொடரட்டும் உங்கள் கவிஜை பனி..(மன்னிக்கவும்) பணி….//

நன்றி ராஜா. ஒருவேளை கவிதைகள் புரிஞ்சதுக்கு பின்குறிப்பு ஒரு காரணமோ? ;)

//இந்த கவிதை ரொம்ப இயற்கையாகவும் அழகாகவும் இருக்கிறது..
இது தான் டாப் கவிதை…இன்னைக்கு..//

ஓ டாப் ஆடர்ல அது வந்திடுச்சா? குட்.

//அப்பறம் வாத்தியார் பெரம்பு எடுத்துட்டு வந்து உங்க மேனியை தீண்டுவார்
பரவா இல்லையா..?//

பரவாயில்லை தல. இதெல்லாம் பாத்தா நிம்மதியா காதலிக்க முடியுமா? :P

//ஆமாம்.. ஒன்னு மட்டும் எனக்கு புரியல… எதுக்கு சில கவிதை-க்கு உள்ள நிறைய ஸ்டார் இருக்கு.. அந்த கவிதை எல்லாம் நாட் அவுட் கவிதையா..?//

நாட் அவுட் கவிதையா? என்னமா யோசிக்கிறீங்க? அதெல்லாம் “Conditions apply” கவிதைங்க (என்ன மடக்க முடியாதே!) ;)


ஸ்ரீ on July 10th, 2008 at 2:17 pm

@ aruna

//Thanx for the vocabulary support.continue this support…I’ll send the tuition fee
Anbudan aruna//

என்னங்க இது? டீச்சரம்மா கிட்டயே டியூஷன் ஃபீஸா? நானே உங்க கிட்ட தான் சந்தேகம் கேக்கலாம்னு இருந்தேன் :)


ஸ்ரீ on July 10th, 2008 at 2:19 pm

@ கோபிநாத்

//சூப்பரு…அருமை…புதுமை…கலக்கிட்ட்டிங்க//

சில வார்த்தைகள் உபயம் நம்ம முத்துலெட்சுமி அக்கா தான். அவங்களுக்கு என் நன்றிகள்.


Z on July 11th, 2008 at 7:47 am

//*தூவல் = Pen,
*பதிவேடு = Record Note,
*குறிப்புப் புத்தகம் = Rough Note,
*கரிக்கோல் = Pencil,
*அடையாளச்சீட்டு = Bookmark.//

:)) Gud one


ஸ்ரீ on July 11th, 2008 at 5:52 pm

@ Z

நன்றி ஹை தல.


புகழன் on July 11th, 2008 at 10:31 pm

என்ன ஸ்ரீ பின் நவீனத்துவ வாடை ரெம்பவே அடிப்பது போல் தெரிகிறது?


திவ்யா on July 13th, 2008 at 3:06 am

ஸ்ரீ,

அழுத்தமான வார்த்தைகளுடன் அழகான கவிதை!

பின் குறிப்பெல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க, புது தமிழ் வார்த்தைகள் கற்றுக்கொள்ள முடிந்தது, நன்றி!!


திவ்யா on July 13th, 2008 at 3:08 am

\உன் புத்தகத்தில்
வாக்கியமாகும் ஆசை இல்லை.
அதன் இறுக்கத்தில்
தவணை முறையில்
சருகாகும் இலையாகவாவது
இருந்துவிட்டுப் போகிறேன்.
அனுமதிப்பாயா?\\

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கிறது இவ்வரிகள்,
ஏக்கத்துடன் அந்த வரி முடிவது அழகு:)))

உங்கள் கவிதைகளில் கொஞ்சம் வித்தியாசமான புதிய அனுகுமுறையில் இந்த கவிதை எழுதியிருக்கிறீங்களோ???
படிக்கும்போது அப்படி தோன்றியது!

ரொம்ப நல்லா வந்திருக்கு ஸ்ரீ கவிதை, வாழ்த்துக்கள் நண்பா!!


Kadhal Priyan on July 13th, 2008 at 10:49 pm

Vanakkam Sri!

Ungaladhu Kavidhaigal anaithum Arumai. Yaar meedhaenum kaadhal undo?

Ungalukkaga oru siru Kavidhai:

காதல் என்பது பாலைவனச்சோலை!
இது என் எண்ணமாய் இருந்தது நேற்று வரை.
உன்னிடத்தில் உண்மைக் காதலை காணும் வரை!!

Vaazhga Kadhal! Vaazhga Nee!!


ஸ்ரீ on July 14th, 2008 at 2:43 pm

@ புகழன்

//என்ன ஸ்ரீ பின்நவீனத்துவ வாடை ரெம்பவே அடிப்பது போல் தெரிகிறது?//

பின்நவீனத்துவமா? அப்படின்னா என்ன தல?


ஸ்ரீ on July 14th, 2008 at 2:45 pm

@ திவ்யா

// ஸ்ரீ,

அழுத்தமான வார்த்தைகளுடன் அழகான கவிதை!

பின் குறிப்பெல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க, புது தமிழ் வார்த்தைகள் கற்றுக்கொள்ள முடிந்தது, நன்றி!!//

ஹா ஹா ரொம்ப நன்றி மேடம். ஏதோ ஒரு சின்ன வித்தியாசம் காட்ட நினைத்து செய்தது தான் இது.

//ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கிறது இவ்வரிகள்,
ஏக்கத்துடன் அந்த வரி முடிவது அழகு//

எப்பவும் சோகமான வரிகள் மனதில் கொஞ்சம் அழுந்தப்பதியும் திவ்யா.

//உங்கள் கவிதைகளில் கொஞ்சம் வித்தியாசமான புதிய அனுகுமுறையில் இந்த கவிதை எழுதியிருக்கிறீங்களோ???
படிக்கும்போது அப்படி தோன்றியது!

ரொம்ப நல்லா வந்திருக்கு ஸ்ரீ கவிதை, வாழ்த்துக்கள் நண்பா!!//

நன்றிகள் திவ்யா கருத்துக்கும் வாழ்த்துக்கும்.


ஸ்ரீ on July 14th, 2008 at 2:49 pm

@ Kadhal Priyan

//Vanakkam Sri!

Ungaladhu Kavidhaigal anaithum Arumai. Yaar meedhaenum kaadhal undo?//

வாங்க காதல் ப்ரியன். நன்றி. காதலைக் காதலிக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்களேன் ;)

//Ungalukkaga oru siru Kavidhai:

காதல் என்பது பாலைவனச்சோலை!
இது என் எண்ணமாய் இருந்தது நேற்று வரை.
உன்னிடத்தில் உண்மைக் காதலை காணும் வரை!!

Vaazhga Kadhal! Vaazhga Nee!!//

கவிதை அழகா இருந்துதுங்க ப்ரியன். நான் தமிழில் தட்டச்சு செய்துள்ளேன். தங்கள் தளமுகவரி கொடுக்கவில்லையே? வாழ்த்துக்கு நன்றி ப்ரியன். :)


நவீன் ப்ரகாஷ் on July 15th, 2008 at 12:21 pm

தமிழும் காதலும்
போட்டியிட்டுக் காதலிக்கிறது
அழகான அகரதியில்…
ரசித்துப்படித்தேன் ஸ்ரீ …


ஸ்ரீ on July 15th, 2008 at 5:07 pm

@ நவீன் ப்ரகாஷ்

//தமிழும் காதலும்
போட்டியிட்டுக் காதலிக்கிறது
அழகான அகரதியில்…
ரசித்துப்படித்தேன் ஸ்ரீ …//

நன்றி தல. காதல் கவிஞரே ரசித்துப் படித்தாரேயானால் கவிதைகள் அப்போ பாஸ் ஆயிடுச்சு போல :)


புகழன் on July 15th, 2008 at 11:02 pm

ஸ்ரீ on July 14th, 2008 at 2:43 pm
@ புகழன்

//என்ன ஸ்ரீ பின்நவீனத்துவ வாடை ரெம்பவே அடிப்பது போல் தெரிகிறது?//

பின்நவீனத்துவமா? அப்படின்னா என்ன தல?

//

தல யா? அப்படீன்னா?


ஸ்ரீ on July 16th, 2008 at 4:11 pm

@ புகழன்

//தல யா? அப்படீன்னா?//

பெரியவங்களை அப்படி கூப்பிடுவது வழக்கம் :P


கிஷோர் on August 4th, 2008 at 7:42 am

//மேல் தாளில் தூவலின்* அழுத்தம்
எழுதாத அடுத்தப் பக்கத்தில்
விட்டுச்செல்லும் தடமாய்
அவ்வப்போது காயப்படுகிறது இதயம்.
சக காதலர்களைக் கடக்கையில்…//

பின்னி பெடலெடுத்திருக்கிறீர்கள். அட்டகாசமான ஒப்பீடு.


ஸ்ரீ on August 5th, 2008 at 9:07 pm

@ கிஷோர்

//பின்னி பெடலெடுத்திருக்கிறீர்கள். அட்டகாசமான ஒப்பீடு.//

ரொம்ப நன்றிங்க கிஷோர். வருகைக்கும் கருத்துக்கும்.

Post a comment
         Please fill in the fields marked with *.
*Name: 
*Email:   (Will not be published.)
URL: 
*Comments: