காமெடி பண்ணி ரொம்ப நாளாச்சு. என்னைய வெச்சே எத்தனை நாள் தான் காமெடி பண்றது? இன்னும் நிறைய சுவாரசியமான தகவல்கள் என் நினைவுகளில் இருந்தாலும் அதெல்லாம் யோசிச்சு பதிவெழுத சோம்பேறித்தனமா இருக்கு. அதுவும் இல்லாம வாசகர் ஹிட் வாங்கணும்னா ஏதாவது மொக்கையா இல்லை நக்கலா எழுதுனா தான் கிடைக்கும்னு ஒரு பெரிய வலைப்பதிவர் (!) சொன்னாங்க. சரி இப்போ என்ன எழுதலாம்னு யோசிச்ச போது வரப்போற ஒரு படத்தை பத்தி எழுதலாம்னு தோணுச்சு. “படம் வரதுக்கு முன்னாடியே என்ன எழுத போற?” அப்டின்னு கேக்குறீங்களா? அட அது என்ன பெரிய விஷயமா? சிலர் படம் இப்படித்தான் இருக்கும்னு சுலபமா சொல்லிடலாம். ஓவர் டு த போஸ்ட்.
1. பஞ்ச பூதம் ரொம்ப முக்கியமா நினைக்கிறார் போல. அதனால தான் போன ரெண்டு படத்துலயும் அறிமுக காட்சியில் அவைகளை ஒன்றன் பின் ஒன்னா உபயோகிச்சிக்கிட்டு வரார். போன படத்துக்கு முந்தின படத்துல ஷுவுல (Shoe shhhhhh…. shhhhh….) இருந்து நெருப்பு பறந்தது. அதுக்கு அடுத்து வந்த படத்துல காலாலயே சுழல் வரவெச்சாருங்கோ. அதனால் அடுத்த பஞ்ச பூதத்துல எதை யூஸ் பண்ணி இருப்பாங்க? ஒரு வேளை சூவுல தண்ணி ரொப்பி பின்னாடி சின்ன ஓட்டை போட்டு நடக்கும் போது ‘புஸ்ஸ்ஸ்ஸ்’னு தண்ணி அடிக்கிறா மாதிரி இருக்குமா? இல்லை வேற ஏதாவது பஞ்ச பூதத்தை உயயோகித்திருப்பாங்களா? (சங்கி மங்கி நடக்க வையாபுரி டீ குடிக்கும் போது ஒரு பஞ்சபூதம் உபயோகித்தாங்களே! அதை திரும்ப யூஸ் பண்ணி இருப்பாங்களா?) எதுவா இருந்தால் என்ன? குழந்தைங்க செருப்புல வர “கொயிங் கொயிங்” சத்தம் வருமே, அதை வெச்சா நல்லா இருக்குமுங்கோ!
2. ரெண்டு ரூம் தள்ளி ஒருவர் குடிக்கப்போகும் பூஸ்டை (Boost - Secret of our energy) தட்டிவிட எகிறி பறந்து போவது போல காட்சி இருந்தால், இந்த படத்தில் தயவு செய்து காஸ்டியூம் டிசைனர் கிட்ட கொஞ்சி கூத்தாடி (அட்லீஸ்டு நொண்டியாவது ஆடி) ரெக்கை மாதிரி செஞ்சி அவர் முதுகில் சட்டையோடு சேத்து கட்டிவிட்டிடுங்கோ நைனா!
3. சின்ன புள்ளத்தனமா ஒரு பந்தை கையில சுத்தவிட்டு அது எல்லாரையும் அடிச்சிட்டு திரும்பி வந்து விரல்லயே உக்காந்துக்குறா மாதிரி காமெடி காட்சிகள் தவிர்க்கலாம். இல்லை அதெல்லாம் இருந்து தான் ஆகணும்னு அடம்பிடிச்சா, போனா போகட்டும்னு ஒரு பூமாராங் (Boomerang) கையில குடுங்கப்பா. கொஞ்சூண்டு லாஜிக் வேணும்ல. என்ன நாஞ்ஜொல்றது?
4. சண்டையில ஆர்வத்துல சட்டைய கழட்டாம பாத்துக்கோங்கப்பா. கழட்டியாச்சுன்னா வீணா “What a man?” அப்படின்னு ஒரு டயலாக் வெக்கணும். அதுவும் “என்ன கொடுமை சார்?” டயலாக் மாதிரி காமெடி ஆகிடும். போதும் அந்த ஒரே ஒரு டயலாக் போதும் 10 வருசத்துக்கு புதுசா எதுவும் வேணாம் பிளீஸ்.
5. அடடா இந்த படத்துல ஏதாவது கேசட் வெளியீட்டு விழா மாதிரி காட்சி இருக்கா? இருந்தா எடுத்துடுங்கப்பா. அப்புறம் அங்க வநது அதை சாப்பிடாதீங்க, இதை சாப்பிடாதீங்கன்னு லெக்சர் அடிக்க வேண்டி வரும். “உருளைகிழங்கு சாப்டா வாய்வு, வாழைப்பழம் சாப்டா…………….” இப்படி எல்லாம் டயலாக் இருந்தா நல்லா இருக்காது. சோ டேக் இட் ஆஃப்.
6. குட்டிக்கதை சொல்றேன், ஜட்டிக்கதை (லக்கி தல, உங்களுக்கு போட்டியா வந்துட்டா? அதான்…) சொல்றேன்னு சீன் வேணாம்யா. தமிழ்மணம் பூராக் கதையாத் தான ஓடிக்கிட்டு இருக்கு இதுக்கு மேல என்ன கதை சொல்லிட முடியும்?
மக்களே இவ்ளோ தானா உன்னால எழுத முடிஞ்சதுன்னு கோச்சுக்காதீங்க. உங்கள் கோவம் புரியுது. எல்லாத்தையும் நானே எழுதிட்டா அப்புறம் என்ன இருக்கு? நீங்க உங்க கருத்துகளையும் சொல்லுங்க. எல்லாத்துக்கு மேலயும் “லொல்லு சபா”னு ஒண்ணு இருக்கு.
ஸ்டார்ட் மீசிக்…
-ஸ்ரீ.
Few related Posts
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
