<< என்ன தான் தசாவதாரம்?                   கடவுளின் காதலி >>
 
Jun
25
    
ஸ்ரீ - Category காதல் in 2008
Add Comments

நண்பர்களே!

இன்றோடு ஒரு வருடம் முடிகின்றது அன்றில் பிறந்து. வலைப்பூக்கள் என்னவென்றே தெரியாமல் நுழைந்தவன் தான் நான். ‘ஒரு வருடம் பெரிய விசயமா என்ன?’ என்ற கேள்வியும் எழலாம். நிச்சயம் இல்லை. காளானாக முளைத்த எனக்கு நீரூற்றியவருக்கு நன்றி சொன்னால் அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். முட்டை உடைத்து, தட்டுத்தடுமாறி பறக்கக் கற்றுக்கொண்ட இந்த அன்றிலுக்கு இளைப்பாற கிளைகள் கொடுத்த அனைத்து நெஞ்சங்களுக்கு என் நன்றி. சரிவர பறக்கவில்லையானால் கல்லெறியலாம் தயக்கம் வேண்டாம்.




“என்ன தான் செய்யலாம் முதல் வருஷத்துக்கு?”னு யோசிக்கும் போது தான், “சரி ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்கலாம்னு” தோணுச்சு.


விதிமுறைகள்:


1. பதிவின் தலைப்பு - “காதல் எனப்படுவது யாதெனில்…” (மாற்றக்கூடாது).

2. என்ன பதிவிடலாம் - இது தான் எழுதணும் என்கிற கட்டாயம் கிடையாது. பதிவு எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம். கதை, கவிதை, நக்கல், கட்டுரை, மொக்கை………. என்ன வேணும்னா எழுதுங்க உங்கள் விருப்பம். (ஆனால் தலைப்போட கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கணும் :) ).


3. பதிவு போட இன்னும் ஒருவரை அழைக்கணும். முன்பெல்லாம் இரண்டு மூன்று பேர் அழைக்கப்பட்டதால் தொடர் சங்கிலிகள் எங்காவது ஒரு தொடர்பு அறுந்தாலும் அவை கொஞ்சம் பயணித்தன. இங்கு ஒருவர் தான் அழைக்கப்படுகிறார் அதனால் நீங்கள் அழைப்பவரின் வசதியைக் கேட்டுவிட்டு கூப்பிடுங்கள்.


நான் அழைப்பவர் - அருட்பெருங்கோ (காதலை பற்றி இவர் தான அழகா சொல்லுவார்).


அதென்ன டா கூப்பிடுறதுல கூடவா கஞ்ச தனம் ரெண்டு மூணு பேரை கூப்பிட்டிருக்கலாமேன்னு சொல்றீங்களா? முதல் வருஷம் அதான் ஒருத்தரை கூப்பிடுறேன்.


காதல் அழிவதில்லை…
-ஸ்ரீ.

Few related Posts

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!




sri on June 25th, 2008 at 11:04 am

வாழ்த்துக்கள் ஸ்ரீ…!! :-)
வெற்றிகரமாக ஒரு ஆண்டை கடந்ததற்கு..!!


sri on June 25th, 2008 at 11:06 am

//சரிவர பறக்கவில்லையானால் கல்லெறியலாம் தயக்கம் வேண்டாம்//
பறக்கத் தெரியலேனா கத்துக்கொடுப்போம் கல்லெறிய மாட்டோம்..!! ;-)


sri on June 25th, 2008 at 11:14 am

உங்க காதலைப் பற்றின கவிதை(definitions??) நல்லா இருக்கு…!! :-)

Slide show-ங்கறதால வரிகளை குறிப்பிட முடியல…!!
ஆனா அந்த ஆதாம், ஏவாள், கண்,பாம்பு பற்றின வரிகள் super..!! :-)


வாழ்த்துகள்.. முதல்வருசம் ஒருத்தர்.. நல்ல காரணம்.. நான் நினைச்சேன் .. ஒருத்தரை தான் காதலிக்கனும்னு சொல்லவரீங்களோன்னு அருட்பெருங்கோ நல்ல சாய்ஸ் இல்ல ஒரே சாய்ஸோ


வர்ணம் உணர்த்தும் ரொம்ப நல்லாருக்கு


Senthil Kumar on June 25th, 2008 at 11:29 am

..வாழ்த்துக்கள் ஸ்ரீ…!!


Senthil Kumar on June 25th, 2008 at 11:31 am

//சரிவர பறக்கவில்லையானால் கல்லெறியலாம் தயக்கம் வேண்டாம்//
பறக்கத் தெரியலேனா கத்துக்கொடுப்போம் கல்லெறிய மாட்டோம்..!! //

இதை நான் வழிமொழிகின்றேன்…


Senthil Kumar on June 25th, 2008 at 11:43 am

அருமையா இருக்குங்க intha Slideshow…

திருவள்ளுவர் இரண்டு வரியில் குறள் எழுதினார்… ஆனால் நீங்க ஒரு வரியை மடக்கி என்னமா எழுதறீங்க
Boss…
வாழ்க, வளர்க… உங்கள் காதல் குறள்…


Swapna on June 25th, 2008 at 1:52 pm

Vazhthukal Sri


எழில் on June 25th, 2008 at 1:59 pm

வாழ்த்துகள் ஸ்ரீ!!!!!

தொடருங்கள் உங்கள் பயணத்தை!!!

“slide show” கவிதைகள் அழகு!!!


ஆ.கோகுலன் on June 25th, 2008 at 3:53 pm

வாழ்த்துக்கள்..!!

Slide show அருமை..!!

//காலானாக முளைத்த// - காளான்..??


Ramya Ramani on June 25th, 2008 at 9:20 pm

\\ வலைப்பூக்கள் என்னவென்றே தெரியாமல் நுழைந்தவன் தான் நான். ‘ஒரு வருடம் பெரிய விசயமா என்ன?’ என்ற கேள்வியும் எழலாம். நிச்சயம் இல்லை\\

முதலில் ஒரு வருடம் பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்.பெரிய விஷயம் தாங்க இது! ஒரு பதிவெழுத இவ்வளோ மெனக்கெட்டிருந்திருப்பீங்க?

எல்லாரும் நல்லா இருக்குனு சொல்ற இந்த Slide Show-தான் எனக்கு தெரியமாட்டேங்குது.ஏன் Load-ஆகலேன்னு தெரியல :(


ஸ்ரீ on June 26th, 2008 at 11:10 am

@ sri

//வாழ்த்துக்கள் ஸ்ரீ…!!
வெற்றிகரமாக ஒரு ஆண்டை கடந்ததற்கு..!!//

ரொம்ப நன்றி மா. ஒரு ஆண்டை கடந்துட்டேன் ஆனா வெற்றிகரமானதான்னு தெரியலை.

//பறக்கத் தெரியலேனா கத்துக்கொடுப்போம் கல்லெறிய மாட்டோம்..!! //

நல்லதுங்க ஆனா கத்துக்கொடுக்க ட்யூஷன் ஃபீஸ் கேக்காம இருந்தா சரி. :)

//உங்க காதலைப் பற்றின கவிதை(definitions??) நல்லா இருக்கு…!!//

காதலை பற்றி என் வரையறைகள் (definitions) என்றில்லை யார் சொன்னாலும் நல்லா தான் மா இருக்கும். ஏன்னா காதல் அவ்ளோ அழகான ஒன்னு.

//Slide show-ங்கறதால வரிகளை குறிப்பிட முடியல…!!
ஆனா அந்த ஆதாம், ஏவாள், கண்,பாம்பு பற்றின வரிகள் super..!! //

இப்போது படங்களின் வேகத்தை குறைத்து விட்டேன். நன்றி.


ஸ்ரீ on June 26th, 2008 at 11:15 am

@ கயல்விழி முத்துலெட்சுமி

//வாழ்த்துகள்.. முதல்வருசம் ஒருத்தர்.. நல்ல காரணம்.. நான் நினைச்சேன் .. ஒருத்தரை தான் காதலிக்கனும்னு சொல்லவரீங்களோன்னு//

நீங்க சொல்றதும் நல்லா தான்க்கா இருக்கு.

//அருட்பெருங்கோ நல்ல சாய்ஸ் இல்ல ஒரே சாய்ஸோ//

அக்கா என்ன இப்படி சொல்லிட்டீங்க? மத்தவங்க தப்பா நினைக்க போறாங்க. அவர் நல்ல ஒரு சாய்ஸ் அதனால் தான் நான் கூப்பிட்டேன். நிறைய பேர் இருக்காங்க அவர்களில் இவர் சிறந்தவர்னு சொல்றேன். கொழப்பிட்டேனா? நானே கொழம்பி போய் தான்கா இருக்கேன் :)

//வர்ணம் உணர்த்தும் ரொம்ப நல்லாருக்கு//

ரொம்ப நன்றி கா.


ஸ்ரீ on June 26th, 2008 at 11:25 am

@ Senthil Kumar

//..வாழ்த்துக்கள் ஸ்ரீ…!!//

நன்றிங்க செந்தில் எல்லாம் உங்க தயவு தான் :)

//பறக்கத் தெரியலேனா கத்துக்கொடுப்போம் கல்லெறிய மாட்டோம்..!!

இதை நான் வழிமொழிகின்றேன்…//

ஆஹா நீங்களுமா? ஓகே மாஸ்டர் நீங்க கத்து குடுத்தா மாதிரியே நடந்துக்குறேன்.

//அருமையா இருக்குங்க intha Slideshow…//

டேங்க்கூ

//திருவள்ளுவர் இரண்டு வரியில் குறள் எழுதினார்… ஆனால் நீங்க ஒரு வரியை மடக்கி என்னமா எழுதறீங்க
Boss…
வாழ்க, வளர்க… உங்கள் காதல் குறள்…//

அவரை வம்புக்கு எழுக்காம இருப்பேனா தல. ஏற்கனவே அதெல்லாம் பண்னிட்டேன் நீங்க பாக்கலையா?

நேரம் கிடைக்கும் போது இங்க போய் பாருங்க.

http://tinyurl.com/48vgxy


ஸ்ரீ on June 26th, 2008 at 11:27 am

@ Swapna

//Vazhthukal Sri//

நன்றி ஸ்வப்ணா


ஸ்ரீ on June 26th, 2008 at 11:28 am

@ எழில்

//வாழ்த்துகள் ஸ்ரீ!!!!!

தொடருங்கள் உங்கள் பயணத்தை!!!

“slide show” கவிதைகள் அழகு!!!//

வாழ்த்துக்கு நன்றி எழில்.


ஸ்ரீ on June 26th, 2008 at 11:30 am

@ ஆ.கோகுலன்

//வாழ்த்துக்கள்..!!

Slide show அருமை..!!//

நன்றி கோகுலன்.

//காலானாக முளைத்த// - காளான்..??

மன்னிக்கவும் தட்டச்சு பிழை. அதிலும் ஒரு நல்லது நடந்திருக்கே! உங்க அறிமுகம் கிடைத்ததை சொன்னேன் :)


ஸ்ரீ on June 26th, 2008 at 11:33 am

@ Ramya Ramani

//முதலில் ஒரு வருடம் பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்.பெரிய விஷயம் தாங்க இது! ஒரு பதிவெழுத இவ்வளோ மெனக்கெட்டிருந்திருப்பீங்க?//

நன்றி ரம்யா. நான் பதிவெழுதி மெனக்கெட்டதை விட அதை படிக்க மத்தவங்க அதிகம் மெனக்கெட்டாங்க என்பது தாங்க உண்மை.

//எல்லாரும் நல்லா இருக்குனு சொல்ற இந்த Slide Show-தான் எனக்கு தெரியமாட்டேங்குது.ஏன் Load-ஆகலேன்னு தெரியல //

என்ன பிரச்சனை என தெரியவில்லை ரம்யா. என்னால் ஏதாவது செய்ய முடியுமா என பார்க்கிறேன். நன்றி.


நிர்ஷன் on June 26th, 2008 at 3:07 pm

வாழ்த்துக்கள். தொடர்ச்சியாக வெற்றி நடை போடுங்கள்


ஸ்ரீ on June 26th, 2008 at 5:40 pm

@ நிர்ஷன்

//வாழ்த்துக்கள். தொடர்ச்சியாக வெற்றி நடை போடுங்கள்//

நன்றி நிர்ஷன். வித்தியாசமான அழகான பெயரா இருகே!


க.மஹாராஜா on June 26th, 2008 at 5:45 pm

No words to explain.. that gif file is excellent.. kavithai ellam summa nachchunu irukku.. apparam ungalukku 1st birthday wishes… all the best. keep it up… may god bless u…..
take care..


Z on June 26th, 2008 at 8:05 pm

vaazththukkal Maappi… Innum pala pala kavithaigalum kathaigalum ezuththi engalathu puthan kizamaigalaigalai nallathoru pozuthu pokku naalaaga maatra vaazththukkal :))))


ஸ்ரீ on June 27th, 2008 at 4:21 pm

@ க.மஹாராஜா

//No words to explain.. that gif file is excellent.. kavithai ellam summa nachchunu irukku.. apparam ungalukku 1st birthday wishes… all the best. keep it up… may god bless u…..
take care..//

நன்றிங்க மகாராஜா. உங்க ஆசிர்வாதம் இருந்தா போதும் ;)


ஸ்ரீ on June 27th, 2008 at 4:24 pm

@ Z

//vaazththukkal Maappi… Innum pala pala kavithaigalum kathaigalum ezuththi engalathu puthan kizamaigalaigalai nallathoru pozuthu pokku naalaaga maatra vaazththukkal //

வாங்க ஜி. உங்களை மாதிரி பெரியவங்க அன்பு இருக்குற வரைக்கும் என் வண்டி பிரச்சனை இல்லாம ஓடும் தல.


குட்டி செல்வன் on June 28th, 2008 at 11:48 am

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஸ்ரீ!!!


பிரேம்குமார் on June 29th, 2008 at 5:15 pm

வாழ்த்துக்கள் :))


ஸ்ரீ on June 30th, 2008 at 10:43 am

@ குட்டி செல்வன், பிரேம்குமார்

வாழ்த்துக்கு நன்றி தோழர்களே. உங்களால் தான் இது சாத்தியம் ஆனது.


aruna on July 2nd, 2008 at 9:12 pm

இன்னும் நூறு வருடங்களைக் கடக்க
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
அன்புடன் அருணா


ஸ்ரீ on July 3rd, 2008 at 3:31 pm

@ aruna

//இன்னும் நூறு வருடங்களைக் கடக்க
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
அன்புடன் அருணா//

வாழ்த்துக்கு நன்றிங்க அக்கா.


[…] ஸ்ரீ துவங்கிய தொடருக்காக எழுதிய சிறுகதை. […]


தமிழன்... on July 10th, 2008 at 1:58 am

முதலில் ஒரு வருட பதிவுலக நிறைவுக்கு வாழத்துக்கள் ஸ்ரீ, மற்றப்படி நீங்கள் பதிகிற விடயம் காலத்தால் அழியாதது தானே…


தமிழன்... on July 10th, 2008 at 2:05 am

நானெல்லாம் கணினி என்றால் என்வென்றே தெரியாமல் பதிய வந்தவன் நான் அழுவதற்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதில் உள்ளே வந்தவன் எழுத முடியாத சொற்களால் நாட்குறிப்பும் மனதும் நிறைந்து கிடக்க; என்னைப்பற்றிதான் பலர் எழுதுகிறார்கள் போல இருக்வே… நானும் எழுதலாம் என்று வந்து விட்டேன் நீங்கள் இப்படிச்சொன்னால் எப்படி ஸ்ரீ நான் அன்றில் ரசிகன் … ஆனால் எப்பொழுதாவதுதான் வருவேன் வந்தால் நாள் முழுக்க இருந்து விட்டுப்போவேன் மனது முழுவதும் நிரம்பியிருக்கும் தருணங்கள் அவை நான் அப்படி வந்து அசையாமல் இருக்கிற வலைப்பூக்கள் ஒரு சில மட்டுமே அதில் இந்த தொடரின் முதல் இரண்டு பேருடைய பதிவுகளும் அடக்கம்…

இதே பின்னூட்டத்தை அருள் அண்ணனுக்கும் கொடுக்கவும்… தனியாக ஒரு மடல் போட முடிந்தால் பகிர்ந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் நிறைய இருக்கிறது…


ஸ்ரீ on July 10th, 2008 at 2:33 pm

@ தமிழன்…

//முதலில் ஒரு வருட பதிவுலக நிறைவுக்கு வாழத்துக்கள் ஸ்ரீ, மற்றப்படி நீங்கள் பதிகிற விடயம் காலத்தால் அழியாதது தானே…//

வாழ்த்துக்கு நன்றி தமிழன்.

//நானெல்லாம் கணினி என்றால் என்வென்றே தெரியாமல் பதிய வந்தவன் நான் அழுவதற்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதில் உள்ளே வந்தவன் எழுத முடியாத சொற்களால் நாட்குறிப்பும் மனதும் நிறைந்து கிடக்க; என்னைப்பற்றிதான் பலர் எழுதுகிறார்கள் போல இருக்வே… நானும் எழுதலாம் என்று வந்து விட்டேன் நீங்கள் இப்படிச்சொன்னால் எப்படி ஸ்ரீ நான் அன்றில் ரசிகன் … ஆனால் எப்பொழுதாவதுதான் வருவேன் வந்தால் நாள் முழுக்க இருந்து விட்டுப்போவேன் மனது முழுவதும் நிரம்பியிருக்கும் தருணங்கள் அவை நான் அப்படி வந்து அசையாமல் இருக்கிற வலைப்பூக்கள் ஒரு சில மட்டுமே அதில் இந்த தொடரின் முதல் இரண்டு பேருடைய பதிவுகளும் அடக்கம்…//

அன்புக்கு நன்றி தமிழன். :)

//இதே பின்னூட்டத்தை அருள் அண்ணனுக்கும் கொடுக்கவும்… தனியாக ஒரு மடல் போட முடிந்தால் பகிர்ந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் நிறைய இருக்கிறது…//

அவரிடமும் இந்த பின்னூட்டத்தை அவரிடமும் தெரிவித்து விட்டேன் தோழரே! நிச்சயம் தனிமடம் அனுப்புங்கள் மேலே என் மின்னஞ்சல் முகவரி இருக்கின்றது. நிறைய பேசுவோம். நன்றி

Post a comment
         Please fill in the fields marked with *.
*Name: 
*Email:   (Will not be published.)
URL: 
*Comments: