இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே….
இது பாகம் 10 முதல் பாகம் இதோ இங்கே.நேரமில்லாதவர்கள் இதை மட்டும் கூட தனியாகப் படிக்கலாம்.
நிறைமாத கர்பிணியாய் மேகக்கூட்டம். உன்னைக் காண வெளியே கால் எடுத்து வைப்பதற்குள் பிரசவித்து விட்டது. சக்கரைவாகப் பறவையைத் தவிர மற்றவை எல்லாம் மனமுடைந்து கிளைகளில். சக்கரைவாகமாகவே பிறந்திருக்கலாம் மழைக்காலத்திலும் கூட காதலித்திருக்கலாமே என எண்ணத்தில் ஜன்னலோரம் மழையை ரசிக்கிறேன். மழையில் ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தது காற்று. என்னை வந்து சேரும் முன் உன்னைத் தொட்டு விட்டதா அது? இவ்வளவு குளிர்கின்றதே இன்று. அருகில் நீயில்லாமல் சாரல்கள் கூட ஊசியாய் என்னைக் குத்தின. மின்சாரக்கம்பிகளில் சிட்டுக்குருவிகளுக்கு பதிலாக மழைத்துளிகள் தொங்கிக் கொண்டிருந்தன ஆனால் அடுத்து வந்த துளி முன்னால் இருந்ததை தள்ளி விட்டு இடம் பிடித்துக் கொண்டது. ம்… இந்த இயற்கையும் கூட மனிதர்களைப் பார்த்து மாறி விட்டதோ?
Read the rest of this entry »
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!