ந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே….
இது பாகம் 4 முதல் பாகம் இதோ இங்கே.
மறுநாள் வந்த உன்னிடம் புதிதாய் வெட்கம் ஒட்டிக் கொண்டிருந்தது. ரோஜாவே அழகு ரோஜா மேல் பன்னீர்த்துளி பேரழகு. ரோஜாவா நீ? குறிஞ்சி! ரோஜா அன்றாடம் பார்க்கலாம் ஆனால் உன்னைப் பார்க்க 12 வருடம் காத்திருந்தேனே குறிஞ்சி தானடி நீ. உன் வெட்கம் தோய்ந்த சிரிப்பு என் காதலை, இப்போது நம் காதலை உறுதிப்படுத்தியது. மாலையில் பள்ளி முடிந்து நாம் இருவரும் மாந்தோப்பில்.
“எனக்கும் உன்னை பிடிக்கும்டா ஆனா நேத்திக்கு முறைச்சிட்டு போயிட்டேன்.” என்றாய் அசடு வழிய. குழம்பிப்போன ஒரு வண்டு உன் தலையை வட்டமிட்டபடி துரத்தியது.
“அத அடிக்காதமா அது என்ன செய்யும் பாவம் இவ்ளோ பெரிய பூவப்பாத்திருக்காது இதுக்கு முன்னாடி.”
“கடிக்க வந்தா சும்மாவா விடுறது?”
“சரி அப்போ அதுக்கு கொடுமையா ஒரு தண்டனை குடுப்போம்.
Read the rest of this entry »
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
